This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-rsf.org/en/ retrieved on 2021/09/19 at 13:02
Reporters Without Borders (RSF) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Reporters without borders

குகநாதன் சபாபதி சுப்பையா

குகநாதன் சபாபதி சுப்பையா

வரையறுக்கப்பட்ட அஸ்க் மீடியா குகநாதன் சபாபதி சுப்பையாவினால் 2008 ம் ஆண்டு இஸ்தாபிக்கப்பட்டது. ஜேம்ஸ் தாஸ் சவரிமுத்து ஆரம்ப உரிமையாளராக பதிவிடப்பட்டுள்ளபோதும், குகநாதன் சபாபதி சுப்பையா வரையறுக்கப்பட்ட அஸ்க் மீடியாவின் தற்போதைய உரிமையாளர் ஆவர். இவர் இந் நிறுவனத்தின் CEO வாகவும் உரிமையாளராகவும் உள்ளார். இந் நிறுவனம் 2008 ல் ஆரம்பிக்கப்பட்டபோது, இவருக்கு இரட்டை பிரஜாவுரிமை இருக்கவில்லை. எண்பதுகளில் பிரான்சுக்கு குடிபெயர்ந்து பாரிஸ் ஈழநாடு என்ற பத்திரிகையை உருவாக்கமுன்னர், இவர் இலங்கையின் வட மாகாணத்தில் புழக்கத்திலிருந்த ஈழநாடு பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணியாற்றியுள்ளார். தொண்ணூறுகளில் பிரான்ஸை தளமாக கொண்ட தமிழ் தொலைக்காட்சியை ஸ்தாபிப்பதில் இவர் முக்கிய நபராக செயல்பட்டார். அதன்பின்னர், றேமினிசென்ட் டெலிவிஷன் (யூரோப்) லிமிட், டிஷ் இன்டெர்னஷனல் லிமிடெட், டிஷ் ஏசியா லிமிடெட், டிஷ் ஏசியா நெட்வெர்க் யூரோ லிமிடெட் ஆகிய நிறுவனங்களில் இவர் பணிப்பாளராக, ஊடகவியலாளராக, CEO வாக பணியாற்றியுள்ளார்.

ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
ஊடக நிறுவனம்
விடயங்கள்

குடும்பமும் நண்பர்களும்

குடும்ப அங்கத்தவர்கள், நண்பர்களின் ஏனைய ஈடுபாடுகள்

குகநாதன் சபாபதி சுப்பையா - ஆஸ்க் மீடியா பிரைவேட் லிமிடெட்டின் உரிமையாளர்.

மேலதிக தகவல்கள்

தரவுகள் மீதான தகவல்கள்

ஆஸ்க் மீடியாவிற்கு உத்தியோகபூர்வ இணையத்தளம் இல்லை. டான் தொலைக்காட்சியின் உத்தியோகபூர்வ
வலைப்பக்கத்திலும் நிறுவனர், பணிப்பாளர்கள் குழாம் மற்றும் அதன் நிறுவன கட்டமைப்பு குறித்த
தகவல்கள் இல்லை. இதன் காரணமாக இரண்டாம் நிலை ஆதாரங்கள் மூலம் தகவல்கள் திரட்டப்பட்டன. நிறுவன
பதிவாளர் திணைக்களத்தில் 2008 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டன.
ஆண்டறிக்கையின் பிரகாரம் உரிமையாளர் ஜேம்ஸ் தாஸ் சவரிமுத்து நிறுவனத்தின் 100 வீத பங்குகளை வைத்திருக்கின்றார். அந்த நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் அழைத்து இது குறித்து விசாரித்த போது, தற்போதைய உரிமையாளர் குகநாதன் சுபபதி சுப்பையா அவர்களும் நிறுவனர் என விளக்கமளிக்கப்பட்டது.

  • Project by
    Verité Research
  •  
    Reporters without borders
  • Funded by
    BMZ