This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-gmr.org/en/ retrieved on 2024/03/29 at 09:02
Global Media Registry (GMR) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Global Media Registry

செயல்முறை

கோட்பாடு: ஊடக பன்மைத்துவம் ஜனநாயக சமூகங்களுக்கு ஒரு திறவுகோல்

ஊடக பன்மைத்துவம் என்பது ஜனநாயக சமூகங்களின் முக்கிய அம்சமாகும், ஏனெனில் அது இலவசமாக சுயாதீனமாக பல்வேறு ஊடகங்களின் வேறுபட்ட கருத்துக்களை பிரதிபலித்து அதிகாரத்தில் உள்ளவர்களை விமர்சிக்க அனுமதிக்கின்றன.

பொதுவாக, ஊடகங்கள் உள்ளடக்கத்தில் சமூக மற்றும் அரசியல் பன்முகத்தன்மை எவ்வாறு பிரதிபலிக்கப்படுகிறது என்பதை குறிக்கும் உள் ஊடக பன்முகத்தன்மைக்கும் (உதாரணமாக: பல்வேறு கலாச்சார குழுக்களின் பிரதிநிதித்துவம், வேறுபட்ட அரசியல் அல்லது கருத்தியல் கருத்துக்கள்) வழங்குனரின் "பன்மைத்துவம்" என்று அறியப்படும் உரிமையாளர்களின் எண்ணிக்கை மற்றும் கட்டமைப்பைக் குறிக்கும் வெளிப்புற ஊடக பன்மைத்துவத்திற்கும் இடையே காணப்படும் வேறுபாட்டை அறியக்கூடியதாகவுள்ளது.

ஊடகங்களின் பன்மைத்துவத்திற்கு ஊடகங்களின் செறிவுகளால் ஏற்படும் மாறுபட்ட கருத்துக்களுக்கு ஆபத்துகள் ஏற்படுகின்றன:  

  • ஒரு சில ஊடகங்கள் மாத்திரம் பொதுமக்களின் கருத்துக்கள்மீது மேலாதிக்கம் செலுத்துபவர்களாகவும் ஏனையவர்கள் நுழைவதற்குத் தடைகளை அதிகரிப்பதோடு அவர்களின் கண்ணோட்டங்களுக்கும் தடை ஏற்படுத்துகின்றனர்.  (ஊடக உரிமையாளர் செறிவு);
  • ஊடக உள்ளடக்கம் சீராகவும் குறிப்பிட்ட தலைப்புகள், மக்கள், கருத்துக்கள் மற்றும் அபிப்பிராயங்கள் (ஊடக உள்ளடக்கச்  செறிவு) ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்தப்படும் போதும்;
  • குறிப்பிட்ட  ஊடக நிநிறுவனங்களின் வெளியீடுகளை மட்டும் நேயர்கள்  வாசிப்பதும்  பார்வையிடும்  கேட்கும் போதும் (ஊடக நேயர் செறிவு)   

இலக்கு: ஊடக உரிமையாண்மைசார் வெளிப்படைத்தன்மையை உருவாக்குதல்

ஊடக பன்முகத்தன்மையானது    பல பரிமாணங்களுக்கும் ஆபத்துக்களுக்கும் முகம் கொடுத்திருப்பினும்,  MOM ஆராய்ச்சிக்குழுவானது வெளிப்புற பன்முகத்தன்மையை மையமாகக் கொண்டதுடன், அது குறிப்பாக  ஊடக உரிமையாளர் செறிவு எவ்வாறு  ஊடகப் பன்முகத்தன்மைக்கு ஒரு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்பதில் மேலும் துல்லியமாக கவனம் செலுத்துகிறது.

ஊடக உரிமையர்களுக்கு வெளிப்படைத்தன்மையில் காணப்படும் பற்றாக்குறை  இதை எதிர்த்து போராட தடையாக உள்ளது:  மக்கள் தாம் பெற்றுக்கொள்கின்ற தகவல்களின் நம்பகத்தன்மையை மதிப்பீடு செய்ய அதை யார் வழங்குகிறார்கள் என அறியாமல் எவ்வாறு செய்ய முடியும்? ஊடகவியலாளர்கள் தாம் வேலை செய்யும் இடங்கள் நிறுவனங்கள் யார் கட்டுப்பாட்டில் உள்ளன என்று அறியாமல்  எவ்வாறு சரியாக வேலை பார்ப்பது?  ஊடக அதிகாரிகள் ஊடக இயக்காழியின் பின்னால் யார் உள்ளனர் என அறியாமல் அதிகளவிலான ஊடக செறிவைப்பற்றி எவ்வாறு உரையாற்றுவார்கள்.

ஆகவே MOM இன் நோக்கம் "இறுதியில் யார் ஊடக உள்ளடக்கத்தை கட்டுப்படுத்துகிறார்கள்?" என்ற கேள்விக்கு பதிலளிக்கும் நோக்குடன் வெளிப்படைத்தன்மையை உருவாக்குவதாகும்.

• பல்வேறு  வகையான ஊடகங்களின்  (தொலைக்காட்சி, வானொலி, இணையம், பத்திரிகை) மிக முக்கியமான ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களையும்  அவர்களின்  கூட்டாண்மைகளை பற்றி தெரிவிப்பதன் மூலம்;

• நேயர்களின் செறிவு அடிப்படையில் பொதுமக்கள் கருத்து-உருவாக்கும் செயல்முறை மீதான சாத்தியமான செல்வாக்கை பகுப்பாய்வு செய்வதன் மூலம்;

• ஊடக உரிமை மற்றும் செறிவு, அத்துடன் ஒழுங்குமுறை பாதுகாப்பு அம்சங்களை நடைமுறைப்படுத்தி   தெளிவுபடுத்துவதன் மூலம்.

வழிவகை: தரவு சேகரிப்பு மற்றும் களப்பணி

ஊடக உரிமையாண்மை கண்காணிப்பானது (MOM) பொதுவான ஆராய்ச்சிச் செயன்முறையை அடிப்படையாகக் கொண்டு, பொதுவில் கிடைக்கக்கூடியவாறும் தொடர்ச்சியான பதிவேற்றப்படக்கூடியதுமாக, பட்டியலிடப்பட்டுள்ள ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள் பற்றிய தரவுகளைப் பதிவேற்றும் ஒரு கருவியாக இருந்து வருகின்றது. 
இது, யார் ஊடகங்களின் உரிமையாளர்கள் என்பதையும், அவர்களின் ஏனைய தொடர்புகள் மற்றும் ஈடுபாடுகள் என்பனவற்றையும், எந்த அளவிற்கு அவர்களின் ஈடுபாடுகள் இருக்கின்றன என்பது பற்றியும், யார் பொதுமக்களின் கருத்துக்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றார்கள் என்பன பற்றிய வெளிப்படைத் தன்மையை உருவாக்குகின்றது. 
களப்பணியானது, ஊடகங்களின் பங்குடமையாளர்கள் யார் என்பதை அறிந்துகொள்வதோடு மட்டும் நின்றுவிடாமல், ஊடகங்களை இறுதியில் யார் கட்டுப்படுத்துகின்றார்கள் என்பது பற்றிய தேடலையும் நோக்கமாகக் கொண்டது. ஊடக உரிமையாண்மை கண்காணிப்பானது (MOM), குறிப்பிட்ட ஊடக சந்தையை மதிப்பீடு செய்து, தரமான பகுப்பாய்வையும் சூழமைவையும் வழங்குவதுடன் நாட்டிலுள்ள சட்டச் சூழலைப்பற்றிய ஆய்வையும் வழங்குகின்றது.  

உள்ளூர் ஆராய்ச்சி நிறுவனமான வெரிட்டே ரிசர்ச் இன் குழுவினருடன் இணைந்து எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பினரால் தரவுகள் சேகரிக்கப்பட்டன. 

கருவி: MOM- பயனர் கையேடு

தரவுகள் விரிவான பயனர் கையேட்டைப் பின்பற்றி பெறப்பட்டன. இக்கையேடு பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது.

  • பகுதி A “சூழமைவு” ஊடக சந்தை மற்றும் பரந்த நிலைமைகள் பற்றிய ஒரு முதல் தோற்றத்தை வழங்குகிறது, உரிமையாளர் பிரச்சினைகள் தொடர்பான ஒழுங்குமுறை கட்டமைப்பு போன்றவை, நாடு தகவல் மற்றும் ஊடக-குறிப்பிட்ட தரவு. பின்வரும் பிரிவுகளின் கண்டுபிடிப்பை நன்கு புரிந்துகொள்ள இந்த பிரிவு அனுமதிக்கிறது மற்றும் ஊடக பன்முகத்தன்மைக்கான மதிப்பீட்டு அபாயங்களை சூழமைவுப்படுத்துதல்.
  • பிரிவு B " ஊடக சந்தை", கருத்து வடிவத்திற்கு பொருத்தமான ஊடக வகைகள் பாவனையாளர்களின் அடைவு மட்டத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. 46 ஊடகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன - 12 தொலைக்காட்சி நிலையங்கள், 11 வானொலி நிலையங்கள், 12 பத்திரிகைகள் மற்றும் 11 இணையதளங்கள்.
  • பிரிவு C "உரிமையாண்மை", உரிமையாளர் / பங்குதாரர் / மிக அதிகமான ஊடகங்களில் செல்வாக்குடன் உள்ளவர்கள் ஆராய்ச்சி செய்யப்படுகின்றனர். முக்கிய ஊடக நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக (அவற்றின் வருவாயுடன் தொடர்புடையவை) அல்லது பார்வையாளர்களால் தங்கள் உரிமையாண்மையின் பண்புகளைப் பற்றி ஆராயவும் ஆராயப்படுகிறது. 19 நிறுவனங்கள் மற்றும் 23 தனிப்பட்ட உரிமையாளர்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர். 
  • பிரிவு D "குறிகாட்டிகள்" ஊடக பன்முகத்தன்மைக்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான ஊடக உரிமைக் கட்டுப்பாட்டினால் ஏற்படும் அபாயங்களுக்கு குறியீட்டைக் கணக்கிடுவதைக் குறிக்கும் குறிகாட்டிகளை விளக்குகிறது. ஏற்கனவே இருக்கும் ஊடக உரிமையாண்மை மற்றும் ஊடக பன்முகத்தன்மை ஆராய்ச்சி அடிப்படையில் பயனர் கையேடு உருவாக்கப்பட்டது. ஐரோப்பிய பல்கலைக்கழக நிறுவனத்தின் (EUI, புளோரன்ஸ்)  பன்மைவாத மற்றும் ஊடக  சுதந்திர மையத்தின் (CMPF) ஊடக பன்மைவாத கண்காணிப்பு மூலம் இக்குறியீடுகள் ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியுடன்  ஊக்கமளித்து, ஒத்திசைக்கப்பட்டுள்ளன. 
  • Project by
    Verité Research
  •  
    Global Media Registry
  • Funded by
    BMZ