This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-rsf.org/en/ retrieved on 2021/07/25 at 15:54
Reporters Without Borders (RSF) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Reporters without borders

தினகரன் இணையத்தளம்

தினகரன்.எல்கே இணையத்தில் தமிழில் வெளியாகும் தினகரன் பத்திரிகைச் செய்திகள் காணப்படுகின்றன. தினகரன் ஈ - பேப்பரை இலவசமாக வாசிப்பதற்கான அனுமதியையும் வாசகர்களுக்கு வழங்குகின்றது. பத்திரிகை மற்றும் இணையத்தளம் அரசுக்கு சொந்தமான அசோசியேட்டட் நியூஸ்பேப்பருக்கு உரித்தானது. உள்நாட்டு, வெளிநாட்டு செய்திகள், வர்ததகம், விளையாட்டு மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பான அறிக்கை என பல பிரிவுகளில் இணையத்தளத்தில் செய்திகள் காணப்படுகின்றன. தினமின, டெய்லி நியூஸ், ரெச, சரசவிய, சன்டே ஒப்சேவர், சிலுமின மற்றும் புதுசரண ஆகியன தினகரன்.எல்கேயின் சகோதர இணையத்தளங்கள் ஆகும்.

பிரதான விடயங்கள்

நுகர்வோர் வீதம்

தரவுகள் கிடைக்கவில்லை

உரிமையாண்மையின் வகை

அரசுக்குச் சொந்தமானது

பிராந்திய உள்ளடக்கம்

சர்வதேசம்

உள்ளடக்கத்தின் வகை

இலவசம்

ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்

அசோசியேட்டட் நியூஸ்பேப்பேர்ஸ் ஒவ் சிலோன் லிமிட்டட் (லேக் ஹவுஸ்)

உரிமையாண்மை

உரிமையாண்மைக் கட்டமைப்பு

தினகரன். எல் கே ஹவுஸ் என்றும் அறியப்படும் அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு நிறுவனமான
எஸ்சோசியேட்டட நியூஸ்பேப்பரஸ் ஒப் சிலோன் லிமிட்டெட்டினால் நிர்வகிக்கப்படுகிறது. தற்போது 99 பங்குதாரர்கள் உள்ளனர். அவர்களுள் பொது நம்பிபக்கைப் பொறுப்பாளர் திணைக்களம், 10 நிறுவனங்கள் மற்றும் 88 தனி மனதர்கள் அடங்கும். அதி கூடிய எண்ணிக்கையிலான பங்குகளை இலங்கை அசாங்கத்தின் சார்பில் பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம் கொண்டிருக்கிறது.

வாக்களிக்கும் உரிமை

தரவுகள் கிடைக்கவில்லை

தனி உரிமையாளர்

குழுமம் / தனி உரிமையாளர்

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் 1961 ம் ஆண்டு 28 ம் இலக்க சட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டது. இது இலங்கையின் தேசிய எரிபொருள் மற்றும் எரிவாயு நிறுவனமாக உள்ளது.

1.8%
ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
விடயங்கள்

பொதுத் தகவல்கள்

நிறுவிய ஆண்டு

தரவுகள் கிடைக்கவில்லை

நிறுவுனரின் ஈடுபாடுகள்

தினகரன் . எல் கே என்பது தமிழ்ப் பத்திரிகையான தினகரனின் அச்சுப் பதிப்பிலே வெளியாகும் செய்திகளை இணையத்தளத்தில் பிரசுரிக்கும் ஒரு இணையத்தளமாகும். இதற்கு மேலதிகமாக இந்த இணையத்தளமானது தினகரனின் இணையப் பத்திரிகையை இலவசமாக அணுகவும் அனுமதியளிக்கிறது. இந்தப் பத்திரிகையும் இணையத்தளமும்
அரசாங்கத்தினால் உரிமை கொள்ளப்பட்ட அமைப்பான, அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் (ANCL அல்லது லேக் ஹவுஸ்) நிறுவனத்துக்கு சொந்தமானவையாகும். டெய்லி நியூஸ், ரெச, தினமின தினகரன் என்பன இதன் தினசரி பத்திரிகைகள். சன்டே ஒப்சேவர், சிலுமின, வார மஞ்சரி என்பன ஞாயிறு பாதிப்புகள் என தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் பத்திரிகைகளை பிரசுரிக்கின்றது. டி.ஆர்.விஜேவர்த்தன அவர்களினால் தனியார் நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டது. 1973 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தினால் அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒவ் சிலோன் (சிறப்பு விதிகள்) சட்டம் இல. 28 இன் மூலம் தேசியமயமாக்கப்பட்டது. 87.56 வீதமான இந்நிறுவனத்தின் பங்குகள் அரசாங்கத்தின் சார்பாக பொதுநம்பிக்கை பொறுப்பாளர் திணைக்களத்தின் வசம் உள்ளது

பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்

கிரிஷாந்த பிரசாத் கூரே - அசோசிட்டேட் நியூஸ்பெபேர்ஸ் சிலோன் லிமிடெட்டின் தலைவர். கப்பிடல் மகாராஜா நிறுவனத்தில் நிறைவேற்று அதிகார பதவி வகித்து, நிறுவனத்தின் வானொலி மற்றும் தொலைக்காட்சி செய்திகளை மேற்பார்வை செய்தார். ரிச்சட் பீரிஸ் குழுமத்தின் கீழ் ரிவிர மீடியா கோபெரேஷன் பிரைவேட் லிமிடேட்டை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியதுடன், அதன் ஸ்தாபக பணிப்பாளராகவும், பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் பநோயற்றியுள்ளார். த நேஷன் மற்றும் ரிவிர என்பன இவரின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்டவை. இருந்தபோதும் ரிவிர, இதன் ஆங்கில பதிப்பாகிய த நேஷன் ஐ 2017 ல் நிறுத்திக்கொண்டது.

பிரதான பதிப்பாசிரியரின் ஈடுபாடுகள்

கணபதிப்பிள்ளை குணராசா தினகரன் தின மற்றும் வாரமஞ்சரி பத்திரிகைகளின் பிரதான செய்தியாசிரியராகவுள்ளார். இப்பதவிக்கு வருமுன்னர் இவர், இணை ஆசிரியராகவும் செய்தியாசிரியராகவும் தினகரன் பத்திரிகையில் பணியாற்றியுள்ளார். தினகரனில் இணையமுன்னர், நேத்ரா தொலைக்காட்சியில் செய்தி மீளபார்வை செய்பவராகவும் இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் மற்றும் பிபிசி லண்டன் வானொலியில் அறிவிப்பாளராகவும், பணியாற்றியுள்ளார். இவர் வரையறுக்கப்பட்ட சுதந்திர பத்திரிகை நிறுவனத்தின் தினபதி மற்றும் சிந்தாமணி ஆகியவற்றில் பத்திரிகையாளராக பணியாற்றியுள்ளார்.

ஏனைய முக்கிய நபர்களின் ஈடுபாடுகள்

எம் எம் மொஹமட் மார்லின் முஸ்லிம் வாலிபர் சங்க ஊடகப் பிரிவிலும் பணியாற்றுகின்றார்.

தொடர்பு

The Associated Newspapers of Ceylon Limited,

No. 35, D.R. Wijewardena Mawatha, Colombo 10

General: + 94 11 2 429 429 +94 11 2 421 181, + 94 11 2 429 640

Email: thinakaranonline@lakehouse.lk

Website: www.thinakaran.lk

நிதிசார் தகவல்கள்

வருவாய் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

தரவுகள் கிடைக்கவில்லை

செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

தரவுகள் கிடைக்கவில்லை

விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)

தரவுகள் கிடைக்கவில்லை

சந்தையில் ஆதிக்கம்

தரவுகள் கிடைக்கவில்லை

மேலதிக தகவல்கள்

தரவுகள் மீதான தகவல்கள்

தினகரன். எல் கே மற்றும் அசோசியேட்டட் நியூஸ்பேப்பேர்ஸ் சிலோன் லிமிட்டட் அல்லது லேக் ஹவுஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் என்பன இவற்றின் உரிமையாண்மை, பணிப்பாளர்கள் மற்றும் நிறுவன அமைப்பு பற்றிய தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை. அதனால் பொதுவில் கிடைக்கக்கூடிய இரண்டாம்தர தகவல்மூலங்கள் மற்றும் நிறுவன பதிவாளர் திணைக்களத்திலிருந்து பெறப்பட்ட ஆண்டு வருமான அறிக்கை என்பனவற்றிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. MOM ஆராச்சிக் குழுவினர் அசோசியேட்டட் நியூஸ்பேப்பேர்ஸ் சிலோன் லிமிட்டட் நிறுவனத்தை 20 ஜூலை 2018 அன்று முறையாக தகவல்கள் பெறும் முகமாக அணுகியது. அனால் நிறுவனம் பதில் அளிக்கவில்லை.

ஊடக நிறுவனத் தகவல்களின் மூலங்கள்

ஆவணம்

  • Project by
    Verité Research
  •  
    Reporters without borders
  • Funded by
    BMZ