This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-rsf.org/en/ retrieved on 2021/07/25 at 20:21
Reporters Without Borders (RSF) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Reporters without borders

தெரண எவ் எம்

தெரண எவ் எம் 2009 இல் ஒலிபரப்பை தொடங்கியது. இது, சிங்களமொழியில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது. இந்நிகழ்ச்சிகளுள் செய்திகள், வானொலி நாடகங்கள் ஆகியன அடங்குகின்றன. தெரண எவ் எம் பவர் ஹவுஸ் லிமிட்டட் நிறுவனத்தின் ஒரு துணை கம்பனியான தெரண மக்ரோ என்டடேய்மண்ட் (பிரைவேட்) லிமிட்டட்டினால் நிருவகிக்கப்படுகின்றது. இணை ஸ்தாபகர்களான ஜயவீர மற்றும் வருணி அமுனுகம ஆகியோர் பவர் ஹவுஸ் லிமிட்டட்டின் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்டிருக்கின்றனர். இது, 14.31 வீத நேயர்களை கொண்டுள்ளது.

பிரதான விடயங்கள்

நுகர்வோர் வீதம்

14.31%

உரிமையாண்மையின் வகை

தனியாருடையது

பிராந்திய உள்ளடக்கம்

தேசிய

உள்ளடக்கத்தின் வகை

இலவச ஒலிபரப்பு

ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்

பவர் ஹவுஸ் லிமிடெட்

உரிமையாண்மை

உரிமையாண்மைக் கட்டமைப்பு

தெரண மக்ரோ என்ரரெய்ன்மென்ற் (பிரைவெட்) லிமிட்டட் பவர் ஹவுஸ் லிமிட்டட் ற்கு சொந்தமானது. டிலித் ஜயவீர மற்றும் வருணி அமுனுகம பர்னான்து ஆகியோர் இணைந்து 49.41 வீத அதி கூடிய பவர் ஹவுஸ் லிமிட்டடின் பங்குகளைக் கொண்டுள்ளனர். அத்துடன் இவர்கள் தனித்தனியாக 9 வீத பங்குகளையும் கொண்டுள்ளனர்.

வாக்களிக்கும் உரிமை

தரவுகள் கிடைக்கவில்லை

தனி உரிமையாளர்

குழுமம் / தனி உரிமையாளர்

டிலித் ஜயவீர மற்றும் வருணி அமுனுகம பெர்னாண்டோ

டிலித் ஜயவீர மற்றும் வருணி அமுனுகம பெர்னாண்டோ ஆகியோர் இணைந்து பவர் ஹவுஸ் நிறுவனத்தின் 49 .41 வீத பங்குகளை வைத்துள்ளனர். அத்துடன் தனித்தனியாக 9 வீத பங்குகளை வைத்துள்ளனர்

49.4%
ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
விடயங்கள்

பொதுத் தகவல்கள்

நிறுவிய ஆண்டு

2009

நிறுவுனரின் ஈடுபாடுகள்

பிரபல தொழில்முயற்சியாளர் டிலித் ஜயவர்தன மற்றும் விஞ்ஞான, தொழிலநுட்ப, ஆராய்ச்சி, திறன் விருத்தி, வாழ்க்கைத் தெரிழில் பயிற்சி மற்றும் கண்டிய மரபுரிமை அமைச்சர் சரத் அமனுகமவின் மகளான வருனி அமுனுகம பெர்ணான்டோ ஆகியோர் பவர் ஹவுஸ் லிமிட்டெட்டிறகுச் சொந்தமான தெரன மெக்ரோ எண்டர்டெயின்மென்ட் (பிரைவேட்) லிமிட்டெட்டை கூட்டாக தாபிததனர். தற்போது, தெரன மெக்ரோ எண்டர்டெயின்மென்ட் (பிரைவேட்) லிமிட்டெட் தெரன டீவீ யையும் எப்எம் தெரனவையும் பராமரிக்கின்றது. டிலித்தும் வருனியும் ஆரம்பத்தில் அவர்கள் மாணவர்களாக இருந்தபோது ட்றயட் (பிரைவேட்) லிமிட்டெட் எனும் விளம்பர நிறுவனத்தோடு தமது வர்த்தக முயற்சியைத் தொடங்கினர். 1993 இல் தாபிக்கப்பட்ட இந்நிறுவனம் நாட்டின் முதலாவது உள்நாட்டு விளம்பர நிறுவனமாக உருவாக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டுரூபவ் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வேட்பினை ஆதரிக்கும் பிரசார இயக்கத்தை நடத்தியமைக்காக பிரசித்தமடைந்தது. ட்றயட் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தைத் தாபித்து, டிலித்தும் வருனியும் 2003 இல் கூட்டிணைக்கப்பட்டு முன்னதாக பவர் ஹவுஸ் (பிறைவேட்) லிமிட்டெட் என்று அழைக்கப்பட்ட பவர் ஹவுஸ் லிமிட்டெட் மற்றும் 2008 இல் கூட்டிணைக்கப்பட்ட தெரன மெக்றோ எண்டர்டெயின்மெண்ட் (பிறைவேட்) லிமிடடெட் போன்ற ஊடகத்தோடு தொடர்புபட்ட வேறு பல வியாபார முயற்சிகளையும் தொடங்கினர். அவரது துணைக்கம்பனிகளில் ஒன்றான இமேஜ்வைஸ் இவ் ஓட்டலின் கணிசமான பங்குகளளைக் கொள்வனவு செய்தபின்னர், ஜயவீர 2010 ஓகஸ்ட் மாதம் றீப்கோம்பர் நிறுவனத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். 2010 ஒக்டோபரில், றீப்கோம்பர் சைட்ரஸ் லெசர் பிஎல்சீ ஆக மீள் பெயரிடப்பட்டதோடு, தற்போது மூன்று இடங்களில் – ஹிக்கடுவ, வஸ்கடுவ மற்றும் கொழும்பு – ஹோட்டல்களைக் கொண்டிருக்கிறது. ஜயவீர இன்று சைட்ரஸ் லெசர் பிஎல்சீ நிறுவனத்தில் ஒரு பணிப்பாளராக இருக்கிறார். 2001 இல், ஜயவீரவும் இன்னமொரு பிரபல வர்த்தகரான நிமல் பெரேராவும் ஜோர்ஜ் ஸ்டூவர்ட் எண்ட் கம்பனி லிமிட்டெட்டின் கிட்டத்தட்ட 43 வீதமான பங்குகளைக் கொள்வனவு செய்தபின்னர் அதன் பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்பட்டனர். பணிப்பாளர் சபையின் தலைவராக அல்லது ஓர் உறுப்பினராக இருக்கும் ஜயவீர தற்போது ஜோர்ஜ் ஸ்டூவர்ட் குழுமத்தின் தலைவராகவும் இருக்கிறார். இது ஒரு நிதிக் கம்பனியையும் – ஜோர்ஜ் ஸ்டூவர்ட் பினேன்ஸ் லிமிட்டெட் - உள்ளடக்குகிறது. 2015 இல்ரூபவ் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் நிறுவனத்தின் பங்குக் கொடுக்கல் வாங்கலில் நிலவியாதாகக் கூறப்படும் ஒழுங்கீனறங்கள் தொடர்பாக டிலித் ஜயவீர, நாலக்க கொடஹேவ, வருனி அமுனுகம மற்றும் ஆனந்தராஜா அமரசேக்கர ஆகியோரின் நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான ஒரு விசாரணைக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம்; அங்கீகரம் வழங்கியது. அத்தகைய கோரிக்கைகள் மேலெழுந்த பின்னர், ஜயவீர தற்போதைய பிதம மந்திரியின் சகோதரரும் டெல்சான் நெட்வேர்க் (பிறைவேட்) லிமிட்டெட்டின் தலைவருமான சான் விக்கிரமசிங்கவிற்கு எதிராக வழக்குத்தொடரப்போவதாக எச்சரிக்கை விடுத்தார். விக்கிரமசிங்கவின் தொலைக்காட்சி அலைவரிசையாகிய டீஎன்எல் ஜயவீரவுக்கு எதிரான கருத்துக்களை ஒளிபரப்புச் செய்தது என்ற குற்றச்சாட்டின் காரணமாகவே இச் எச்சரிக்கையை விடுத்தார். விக்கிரமசிங்க மன்னிப்புக் கேட்டதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து இவ் வழக்குத் தொடுத்தல் கைவிடப்பட்டது. விக்கிரமசிங்கவின் மகள் இஷானியும் ஜயவீரவின் ட்ரயட் (பிரைவேட்) லிமிட்டட்டின் செயற்பாடுகளின் முன்னர் மிகநெருக்கமாகத் தொடர்புபட்டிருந்தார். இதே ஆண்டில் ஜயவீரவின் சட்டத்தரணிகள் கெப்பிட்டல் மகாராஜா நிறுவன லிமிட்டட்டின் தலைவரான ஆர்.ராஜமகேந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக எச்சரிக்கைவிடுத்தனர். ராஜமகேந்திரனின் தொலைக்காட்சி நிறுவனமான சிரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதாக கூறப்படும் அவதூறு கூற்றுக்களுக்கு எதிராக ரூபா 2 மில்லியன் (அ.டொலர் சுமார் 12 ,500) கோரி வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது. எனினும் ராஜமகேந்திரனின் வழக்கறிஞர்களும் ஜயவீர அவ்வழக்கைத் தொடரப் போவதானால் ரூபா 20 பில்லியன் (அ.டொலர் சுமார் 125 மில்லியன்) நட்டஈடு கோரி எதிர்வழக்கு தாக்கல் செய்யப் போவதாக எச்சரிக்கைவிடுத்தனர்.

பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்

மாதவா மந்தவல இந் நிறுவனத்தின் பணிப்பாளராகவும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் உள்ளார். பவர் ஹவுஸ் (பிரைவெட்) லிமிட்டடின் பங்குதாரராக இவர் பட்டியலிடப்பட்டுள்ளார்

ஏனைய முக்கிய நபர்களின் ஈடுபாடுகள்

லக்சிறி விக்ரமகே ...() இவர் தெரண மக்ரோ என்டடெய்ன்மென்ட் பிரைவெட்) லிமிட்டடை தாய் நிறுவனமாகக்கொண்ட பவர் ஹவுஸ் (பிரைவெட்) லிமிட்டடின் 2 வீத பங்குதாரராகவுள்ளார்.

தொடர்பு

Power House Limited

No. 320, T.B. Jaya Mawatha, Level 4, Colombo 10

Tel: +945300800, +945300700

Fax: +942506226

Website: fmderana.lk

நிதிசார் தகவல்கள்

வருவாய் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

தகவல் கிடைக்கவில்லை

செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

தகவல் கிடைக்கவில்லை

விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)

தகவல் கிடைக்கவில்லை

சந்தையில் ஆதிக்கம்

தகவல் கிடைக்கவில்லை

மேலதிக தகவல்கள்

தரவுகள் மீதான தகவல்கள்

தெரண எவ் எம் இன் உத்தியோகபூர்வ வலைத்தளம் அந் நிறுவனத்தின் நிறுவன கட்டமைப்பு தொடர்பாக போதுமான தகவல்களை வழங்கவில்லை. இதனால், இதன் அனுமதி பாத்திரத்தை, பவர் ஹவுஸ் நிறுவனமா அல்லது தெரண மக்ரோ என்டடேய்மண்ட் (பிரைவேட்) லிமிட்டட் நிறுவனமா வைத்துள்ளது என்பதை உறுதிப்படுத்த முடியாதுள்ளது. நிறுவனம் ஆகியன தொடர்பான மிக அண்மைய தரவுகள் 2017 ஆம் ஆண்டிலிருந்து கிடைக்கக் கூடியதாகவுள்ளன. ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக்குழு இக்கம்பனியின் தகவல்களை முறையாக கோரி 2018 யூலை 20 ஆம் திகதி பவர் ஹவுஸ் நிறுவனத்தை அணுகியபோது அக்கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை.

ஊடக நிறுவனத் தகவல்களின் மூலங்கள்

ஆவணம்

  • Project by
    Verité Research
  •  
    Reporters without borders
  • Funded by
    BMZ