This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-rsf.org/en/ retrieved on 2021/07/25 at 20:37
Reporters Without Borders (RSF) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Reporters without borders

அத தெரண

பவர்ஹவுஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான தெரண மக்ரோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் உள்ள அத தெரண மும்மொழிகளிலும் ஒன்லைன் செய்திகளை வழங்குகின்றது. அத தெரண 2007 இல் கையடக்கத் தொலைபேசிகள் மூலம் குறுச்செய்திகள் அனுப்புவதற்காக டயலொக் ரெலிகொம்முடன் கைகோர்த்துக் கொண்டது. தற்போது அனைத்து கையடக்கத் தொலைபேசி வழங்குனவர்களும் அத தெரண குறுத்செய்தி வசதிகளை வழங்குகின்றனர். மேலதிகமாக, தெரண மக்ரோ எண்டர்டெயின்மென்ட் பிரைவட் லிமிடெட் இலங்கையின் முதலாவது 24 மணித்தியால தொலைக்காட்சி சேவையான 'அத தெரண 24ஒ7' அறிமுகப்படுத்தினார்கள். இந்த அலைவரிசையை டயலொக் மற்றும் பியோ டிவி பாவனையாளர்கள் மட்டுமே பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதான விடயங்கள்

நுகர்வோர் வீதம்

தரவுகள் கிடைக்கவில்லை

உரிமையாண்மையின் வகை

தனியார்

பிராந்திய உள்ளடக்கம்

சர்வதேசம்

உள்ளடக்கத்தின் வகை

இலவசம்

ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்

பவர் ஹவுஸ் லிமிடெட்

உரிமையாண்மை

உரிமையாண்மைக் கட்டமைப்பு

தெரண மக்ரோ என்டெர்டெய்ன்மெண்ட் (பிரைவெட்) பவர் ஹவுஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது. டிலித் ஜயவீர மற்றும் வருணி அமுனுகம பெர்னாண்டோ ஆகியோர் இணைந்து பவர் ஹவுஸ் நிறுவனத்தின் 49 .41 வீத பங்குகளை வைத்துள்ளனர். அத்துடன் தனித்தனியாக 9 வீத பங்குகளை வைத்துள்ளனர்.

வாக்களிக்கும் உரிமை

தரவுகள் கிடைக்கவில்லை

தனி உரிமையாளர்

குழுமம் / தனி உரிமையாளர்

டிலித் ஜயவீர மற்றும் வருணி அமுனுகம பெர்னாண்டோ

டிலித் ஜயவீர மற்றும் வருணி அமுனுகம பெர்னாண்டோ ஆகியோர் இணைந்து பவர் ஹவுஸ் நிறுவனத்தின் 49 .41 வீத பங்குகளை வைத்துள்ளனர். அத்துடன் தனித்தனியாக 9 வீத பங்குகளை வைத்துள்ளனர்

49.4%
ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
விடயங்கள்

பொதுத் தகவல்கள்

நிறுவிய ஆண்டு

தரவுகள் கிடைக்கவில்லை

நிறுவுனரின் ஈடுபாடுகள்

பிரபல தொழில்முயற்சியாளர் டிலித் ஜயவர்தன மற்றும் விஞ்ஞான, தொழிலநுட்ப, ஆராய்ச்சி, திறன் விருத்தி, வாழ்க்கைத் தெரிழில் பயிற்சி மற்றும் கண்டிய மரபுரிமை அமைச்சர் சரத் அமனுகமவின் மகளான வருனி அமுனுகம பெர்ணான்டோ ஆகியோர் பவர் ஹவுஸ் லிமிட்டெட்டிறகுச் சொந்தமான தெரன மெக்ரோ எண்டர்டெயின்மென்ட் (பிரைவேட்) லிமிட்டெட்டை கூட்டாக தாபிததனர். தற்போது, தெரன மெக்ரோ எண்டர்டெயின்மென்ட் (பிரைவேட்) லிமிட்டெட் தெரன டீவீ யையும் எப்எம் தெரனவையும் பராமரிக்கின்றது. டிலித்தும் வருனியும் ஆரம்பத்தில் அவர்கள் மாணவர்களாக இருந்தபோது ட்றயட் (பிரைவேட்) லிமிட்டெட் எனும் விளம்பர நிறுவனத்தோடு தமது வர்த்தக முயற்சியைத் தொடங்கினர். 1993 இல் தாபிக்கப்பட்ட இந்நிறுவனம் நாட்டின் முதலாவது உள்நாட்டு விளம்பர நிறுவனமாக உருவாக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டுரூபவ் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வேட்பினை ஆதரிக்கும் பிரசார இயக்கத்தை நடத்தியமைக்காக பிரசித்தமடைந்தது. ட்றயட் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தைத் தாபித்து, டிலித்தும் வருனியும் 2003 இல் கூட்டிணைக்கப்பட்டு முன்னதாக பவர் ஹவுஸ் (பிறைவேட்) லிமிட்டெட் என்று அழைக்கப்பட்ட பவர் ஹவுஸ் லிமிட்டெட் மற்றும் 2008 இல் கூட்டிணைக்கப்பட்ட தெரன மெக்றோ எண்டர்டெயின்மெண்ட் (பிறைவேட்) லிமிடடெட் போன்ற ஊடகத்தோடு தொடர்புபட்ட வேறு பல வியாபார முயற்சிகளையும் தொடங்கினர். அவரது துணைக்கம்பனிகளில் ஒன்றான இமேஜ்வைஸ் இவ் ஓட்டலின் கணிசமான பங்குகளளைக் கொள்வனவு செய்தபின்னர், ஜயவீர 2010 ஓகஸ்ட் மாதம் றீப்கோம்பர் நிறுவனத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். 2010 ஒக்டோபரில், றீப்கோம்பர் சைட்ரஸ் லெசர் பிஎல்சீ ஆக மீள் பெயரிடப்பட்டதோடு, தற்போது மூன்று இடங்களில் – ஹிக்கடுவ, வஸ்கடுவ மற்றும் கொழும்பு – ஹோட்டல்களைக் கொண்டிருக்கிறது. ஜயவீர இன்று சைட்ரஸ் லெசர் பிஎல்சீ நிறுவனத்தில் ஒரு பணிப்பாளராக இருக்கிறார். 2001 இல், ஜயவீரவும் இன்னமொரு பிரபல வர்த்தகரான நிமல் பெரேராவும் ஜோர்ஜ் ஸ்டூவர்ட் எண்ட் கம்பனி லிமிட்டெட்டின் கிட்டத்தட்ட 43 வீதமான பங்குகளைக் கொள்வனவு செய்தபின்னர் அதன் பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்பட்டனர். பணிப்பாளர் சபையின் தலைவராக அல்லது ஓர் உறுப்பினராக இருக்கும் ஜயவீர தற்போது ஜோர்ஜ் ஸ்டூவர்ட் குழுமத்தின் தலைவராகவும் இருக்கிறார். இது ஒரு நிதிக் கம்பனியையும் – ஜோர்ஜ் ஸ்டூவர்ட் பினேன்ஸ் லிமிட்டெட் - உள்ளடக்குகிறது. 2015 இல்ரூபவ் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் நிறுவனத்தின் பங்குக் கொடுக்கல் வாங்கலில் நிலவியாதாகக் கூறப்படும் ஒழுங்கீனறங்கள் தொடர்பாக டிலித் ஜயவீர, நாலக்க கொடஹேவ, வருனி அமுனுகம மற்றும் ஆனந்தராஜா அமரசேக்கர ஆகியோரின் நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான ஒரு விசாரணைக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம்; அங்கீகாரம் வழங்கியது. அத்தகைய கோரிக்கைகள் மேலெழுந்த பின்னர், ஜயவீர தற்போதைய பிதம மந்திரியின் சகோதரரும் டெல்சான் நெட்வேர்க் (பிறைவேட்) லிமிட்டெட்டின் தலைவருமான சான் விக்கிரமசிங்கவிற்கு எதிராக வழக்குத்தொடரப்போவதாக எச்சரிக்கை விடுத்தார். விக்கிரமசிங்கவின் தொலைக்காட்சி அலைவரிசையாகிய டீஎன்எல் ஜயவீரவுக்கு எதிரான கருத்துக்களை ஒளிபரப்புச் செய்தது என்ற குற்றச்சாட்டின் காரணமாகவே இச் எச்சரிக்கையை விடுத்தார். விக்கிரமசிங்க மன்னிப்புக் கேட்டதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து இவ் வழக்குத் தொடுத்தல் கைவிடப்பட்டது. விக்கிரமசிங்கவின் மகள் இஷானியும் ஜயவீரவின் ட்ரயட் (பிரைவேட்) லிமிட்டட்டின் செயற்பாடுகளின் முன்னர் மிகநெருக்கமாகத் தொடர்புபட்டிருந்தார். இதே ஆண்டில் ஜயவீரவின் சட்டத்தரணிகள் கெப்பிட்டல் மகாராஜா நிறுவன லிமிட்டட்டின் தலைவரான ஆர்.ராஜமகேந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக எச்சரிக்கைவிடுத்தனர். ராஜமகேந்திரனின் தொலைக்காட்சி நிறுவனமான சிரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதாக கூறப்படும் அவதூறு கூற்றுக்களுக்கு எதிராக ரூபா 2 மில்லியன் (அ.டொலர் சுமார் 12 ,500) கோரி வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது. எனினும் ராஜமகேந்திரனின் வழக்கறிஞர்களும் ஜயவீர அவ்வழக்கைத் தொடரப் போவதானால் ரூபா 20 பில்லியன் (அ.டொலர் சுமார் 125 மில்லியன்) நட்டஈடு கோரி எதிர்வழக்கு தாக்கல் செய்யப் போவதாக எச்சரிக்கைவிடுத்தனர்.

பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்

மடவா மடவல நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி. இவர் பவர் ஹவுஸ் நிறுவனத்தின் ஒரு பங்குதாரராக பட்டியலிடப்பட்டுள்ளார்

பிரதான பதிப்பாசிரியரின் ஈடுபாடுகள்

தரவுகள் கிடைக்கவில்லை

ஏனைய முக்கிய நபர்களின் ஈடுபாடுகள்

லக்சிறி விக்ரமகே நிறுவனத்தின் பிரதி தலைவராகவும் பணிப்பாளராகவும் செயற்படுகின்றார். தெரன
மக்ரோ எண்டெர்டைன்மெண்ட் நிறுவனத்தை தாய் நிறுவனமாகக் கொண்ட பவர் ஹவுஸ் நிறுவனத்தின் இரண்டு வீத பங்குகளை வைத்துள்ளார்.

தொடர்பு

Derana Macro Entertainment (Pvt) Limited

No. 320, T.B Jaya Mawatha, Level 4, Colombo 10

Tel: +945300800, +945300700

Fax: +942506226

Web Editor (English) : yusuf@derana.lk

Web Editor (Sinhala) : samans@derana.lk

Web Editor (Tamil) : bavan@derana.lk

Website: www.derana.lk

நிதிசார் தகவல்கள்

வருவாய் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

தரவுகள் கிடைக்கவில்லை

செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

தரவுகள் கிடைக்கவில்லை

விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)

தரவுகள் கிடைக்கவில்லை

சந்தையில் ஆதிக்கம்

தரவுகள் கிடைக்கவில்லை

மேலதிக தகவல்கள்

தரவுகள் மீதான தகவல்கள்

அத தெரன வின் உத்தியோகபூர்வ இணையத்தளம் நிறுவன அமைப்பு பற்றிய போதிய தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை. உரிமையாண்மை தொடர்பான தகவல்கள் நிறுவன பதிவாளர் திணைக்களத்திலிருந்து பெறப்பட்ட ஆண்டு வருமான அறிக்கையிலிருந்து பெறப்பட்டன. 2015 ம் ஆண்டு தகவல்களே அண்மைய தகவல்களாக தனப்படுகின்றன. MOM ஆராச்சிக் குழுவினர் பவர் ஹவுஸ் நிறுவனத்தை 20 ஜூலை 2018 அன்று முறையாக தகவல்கள் பெறும் முகமாக அணுகியபோதும் நிறுவனம் பதில் அளிக்கவில்லை.

ஊடக நிறுவனத் தகவல்களின் மூலங்கள்

ஆவணம்

  • Project by
    Verité Research
  •  
    Reporters without borders
  • Funded by
    BMZ