This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-rsf.org/en/ retrieved on 2020/09/25 at 22:47
Reporters Without Borders (RSF) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Reporters without borders

நவரத்னசாமி குடும்பம்

நவரத்னசாமி குடும்பம்

நவரட்னசாமி குடும்பம் ஸ்மார்ட் நெட்வேக்ஸ் (பிரைவெட்) லிமிடெட் நிறுவனத்தின் முழு உரிமையை கொண்டுள்ளது. சஞ்சய் என அழைக்கப்படும் மயூரன் நவரட்னசாமி இலங்கை லங்காசிறியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக 2003 ல் இருந்து பணியாற்றியுள்ளார். மயூரன் இலங்கை லங்காசிறியின் 50 வீத உரிமையைக் கொண்டுள்ள அதேவேளை அவரின் தந்தை ஆறுமுகம் நவரட்னசாமி ஸ்மார்ட் நெட்வேக்ஸ் (பிரைவெட்) லிமிடெட் ஊடக மீதி 50 வீத உரிமையைக் கொண்டுள்ளார். அத்துடன் பிரித்தானிய கம்பெனிகள் திணைக்களத்தின் தரவுகளின்படி மயூரன், லங்காசிறி லிமிடெட், மங்கோட்ரீ டெக் லிமிடெட், சிகிதி லிமிடெட், அரிட்மார்ட் நெட்வேக் லிமிடெட், ஸ்டார் மார்க்கெட்டிங் அன்ட் டிஸ்ட்ரிபியூஷன் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் பணிப்பாளராகவுள்ளார். மயூரன் நதீஷா செவ்வந்தி நவரட்னசாமியை மணமுடித்துள்ளார். பிரித்தானிய கம்பெனிகள் திணைக்களத்தின்படி நதீஷா 2015 ல் பிரித்தானியாவில் பதிவுசெய்யப்பட்ட லங்காசிறி லிமிடெட் நிறுவனத்தின் தனிப் பங்காளராக காணப்படுகின்றார்.

ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
ஊடக நிறுவனம்
விடயங்கள்

வியாபாரம்

தெரியவில்லை

மங்கோட்ரீ டெக் லிமிடெட்

குடும்பமும் நண்பர்களும்

குடும்ப அங்கத்தவர்கள், நண்பர்களின் ஏனைய ஈடுபாடுகள்

மயூரன் நவரத்னசாமி - லங்காசிறியின் பிரதான நிறைவேற்று அதிகாரியாக 2003 ம் ஆண்டிலிருந்து செயற்படுகின்றார். இவர் சஞ்சய் என சிலசமயம் அழைக்கப்டுகின்றார். ஐக்கிய இராச்சிய கம்பனி பதிவுகளின்படி இவர் பணிப்பாளர்- லங்காசிறி லிமிடெட், மங்கோட்ரீ டெக் லிமிடெட், சிகிதி லிமிடெட், அர்த்மத் நெட்வெர்க் லிமிடெட், ஸ்டார் மாக்கெட்டிங் அன்ட் டிஸ்ட்ரிபியூஷன் லிமிடெட். இவர் ஸ்மார்ட் நெட்வெர்க் பிரைவேட் லிமிடெட்டின் 50 % பங்குகளை வைத்துள்ளார்.

மேலதிக தகவல்கள்

பிரதான தலைப்புக்கள்

தரவுகள் கிடைக்கவில்லை

தரவுகள் மீதான தகவல்கள்


நவரத்னசாமி குடும்பத்தைப்பற்றிய மட்டுப்படுத்தப்பட்ட தகவல்களே காணப்படுகின்றன. ஸ்மார்ட் நெட்வெர்க் பிரைவேட் லிமிடெட்டிற்கு உத்தியோகபூர்வ இணையத்தளம் இல்லை. அத்துடன், லங்காசிறி இணையதளமும், இக் குடும்பத்தைப்பற்றிய தகவல்களை வெளியிடவில்லை. அதனால், இரண்டாம்தர தகவல் மூலங்கள் பயன்படுத்தப்பட்டன. நிறுவன பங்குதாரர்களின் விபரங்கள் கம்பெனிகள் பதிவாளர் திணைக்களத்திலுள்ள ஆண்டு வருமான பட்டியலிலிருந்து பெறப்பட்டன. 2017 ம் ஆண்டு பிந்திக்கிடைத்த தரவாகும். தனிநபர்கள் பற்றிய தகவல்கள், அவர்களின் சமூக வலைதள பக்கங்களான லிங்க்ட் இன் மற்றும் முகப்புத்தகத்திலிருந்து பெறப்பட்டன. அத்துடன், மயூரன் நவரத்னசாமி மற்றும் நதீஷா செவ்வந்தி மயூரன் பற்றிய தகவல்கள் ஐக்கிய இராச்சிய கம்பெனிகள் திணைக்களத்திலிருந்து பெறப்பட்டன.

  • Project by
    Verité Research
  •  
    Reporters without borders
  • Funded by
    BMZ