நடேசன் குடும்பம்
நடேசன் குடும்பம் கூட்டாக எக்ஸ்பிறஸ் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் (பிறைவேட்) லிமிட்டெட்டின் 12.8 வீத பங்குகளைக் கொண்டிருக்கிறார்கள். குமார் நடேசன் என்றும் அறியப்படும் சிவக்குமார் நடேசன் இலங்கை பத்திரிகை நிறுவகத்தின் தற்போதைய தலைவராகும் என்பதோடு, இலங்கை பத்திரிகைச் சங்கத்தையும் பிரதிநிதித்துவப் படுத்துகிறார். மேலும், குமார் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டுச் ஆணைக்குழுவில் ஒரு பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் பணியாற்றுகிறார். எக்ஸ்பிறஸ் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் (பிறைவேட்) லிமிட்டெட்டிலும் ஆசிய ஊடக வெளியீடுகள் (பிறைவேட்) லிமிட்டெட்டிலும் குமார் பணிப்பாளர் பதவி வகிக்கின்றார். குமாரின் மகள் சபீத்தா ஆர். நடேசன் அவருடன்சேர்ந்து எக்ஸ்பிறஸ் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் (பிறைவேட்) லிமிட்டெட்டில் பங்குகளைக் கொண்டிருக்கிறார். குமார் நடேசனின் மகன் சிறினிவாஸ் கார்த்திக் குமார் நடேசன் தொழிலால் ஒரு சட்டத்தரணியாவார் என்பதோடு, அமெரக்காவின் உட்டாவில் அமைந்துள்ள ஒரு வழக்குத் தொடர்தல் கம்பனியான நடேசன் பெக் பிசி இன் தற்போதைய ஸ்தாபகப் பங்காளராவார். முன்னதாக, கார்த்திக் குமார் நடேசன் ஸ்நெல் எண்ட் வில்மர் எல்எல்பி நிறுவனத்தில் ஒரு இணையாளராக பணியாற்றினார்
குடும்பமும் நண்பர்களும்
குடும்ப அங்கத்தவர்கள், நண்பர்களின் ஏனைய ஈடுபாடுகள்
குமார் நடேசன் என்றும் அறியப்படும் சிவக்குமார் நடேசன் - இலங்கை பத்திரிகை நிறுவகத்தின் தற்போதைய தலைவராகும். எக்ஸ்பிறஸ் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் (பிறைவேட்) லிமிட்டெட்டின் முகாமைத்துவ பணிப்பாளர். பணிப்பாளர் - ஏசியன் மீடியா பப்பிளிகேஷன் (பிறைவேட்) லிமிட்டெட்.
சிறினிவாஸ் கார்த்திக் குமார் நடேசன் - தொழிலால் ஒரு சட்டத்தரணியாவார் என்பதோடு, அமெரிக்காவின் உட்டாவில் அமைந்துள்ள ஒரு வழக்குத் தொடர்தல் கம்பனியான நடேசன் பெக் பிசி இன் ஸ்தாபகப் பங்காளராவார்.
முன்னதாக, கார்த்திக் குமார் நடேசன் ஸ்நெல் எண்ட் வில்மர் எல்எல்பி நிறுவனத்தில் ஒரு இணையாளராக பணியாற்றினார்
சபீத்தா ஆர். நடேசன் - குமார் நடேசனின் மகள். தந்தையுடன் இணைந்து எக்ஸ்பிறஸ் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் (பிறைவேட்) லிமிட்டெட்டில் பங்குகளைக் கொண்டிருக்கிறார்.
மேலதிக தகவல்கள்
பிரதான தலைப்புக்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
வீரகேசரி பத்திரிகை மற்றும் எக்ஸ்பிறஸ் நியூஸ்பேபர்ஸ் ஒப் சிலோன் (பிறைவேட்) லிமிட்டட் ஆகியவற்றின்
உத்தியோகபூர்வ வலைத்தளம் அப்பத்திரிகையின் ஸதாபகர், பணிப்பாளர் சபை அல்லது அதன் நிறுவன கட்டமைப்பு ஆகியனபற்றிய எவ்வித விபரங்களையும் தருவதில்லை. எனவே, இரணடாம் நிலை மூலங்களும் கம்பனியினால் வழங்கப்பட்ட பதில்களும் இவ்வாராய்ச்சி நடைமுறையின்போது உசாத்துணைகளாகப் பயன்படுத்தப்பட்டன. பங்குதாரர்கள் தொடர்பான தகவல்கள் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் உள்ள வருடாந்த ரிட்டேர்ன்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டன. 2017 ஆம் ஆண்டிற்கான வாசகர் பற்றிய தரவுகள் இலங்கை சந்தை ஆய்வுப் பணியகத்திலிருந்து (LMRB) பெற்றுக்கொள்ளப்பட்டன. அவை வீரகேசரியின் வார மஞ்சரி மற்றும் நாளிதழ் ஆகியவற்றின் தொகையாகும். ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக் குழு இக் கம்பனியின் தகவல்களை முறையாகக் கோரி 2018 ஜுலை 20 ஆம் திகதி எக்ஸ்பிறஸ் நியூஸ்பேபர்ஸ் ஒப் சிலோன் (பிறைவேட்) லிமிட்டெட்டை அணுகியபோது அக் கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட கோரிக்கைக்கு 2018 ஓகஸ்ட் 20 ஆம் திகதி பதிலளித்தது.