This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-gmr.org/en/ retrieved on 2024/03/28 at 23:11
Global Media Registry (GMR) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Global Media Registry

நியூஸ் ஃபெர்ஸ்ட்

கப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் கீழ் உள்ள செய்தி வழங்குனரே நியூஸ் பெர்ஸ்ட். டிஜிட்டல், தொலைக்காட்சி மற்றும் வானொலி என மூன்று ஊடகங்களில் இயங்குகின்றது. 2007 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதி ஈதலயா.கொம் என்ற பெயரில் முதன் முதலாக டிஜிட்டல் ஊடகம் ஆரம்பிக்கப்பட்டது. எனினும், பின்னர் அந்தப் பெயர் நியூஸ்பெர்ஸ்ட்.எல்கே என மாற்றப்பட்டது. ஆரம்பத்தில் சிங்களம் பேசும் மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட போதும், தற்போது சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் செய்திகளை வழங்குகின்றது. இணையத்தளத்தில் செய்திகள் எழுத்துக்களாகவும், வீடியோக்களாவும் பிரசுரிக்கப்படுகின்றது. எம்.ரி.வி சனல் பிரைவட் லிமிடட் நிறுவனத்தினால் காலை 5.55 முதல் நள்ளிரவு வரை நாளாந்தம் பதிவுசெய்யப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. உள்ளுர் செய்திகள் மாத்திரமன்றி சர்வதேச செய்திகள், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு செய்திகளும் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படுகின்றது.

பிரதான விடயங்கள்

நுகர்வோர் வீதம்

தரவுகள் கிடைக்கவில்லை

உரிமையாண்மையின் வகை

தனியார்

பிராந்திய உள்ளடக்கம்

சர்வதேசம்

உள்ளடக்கத்தின் வகை

இலவசம்

ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்

வரையறுக்கப்பட்ட கபிட்டல் மகாராஜா நிறுவனம்

உரிமையாண்மை

உரிமையாண்மைக் கட்டமைப்பு

எம்ரிவி சனல் பிரைவேட் லிமிட்டட் இலங்கையின் மிகப்பெரிய குழுமங்களுள் ஒன்றான கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தன் ஒரு துணை நிறுவனமாகும். கெப்பிட்டல் மகாராஜா நிறுவனமும் அதன் துணைக் கம்பனிகளும் கூட்டு உரித்தாண்மை கட்டமைப்புகளைக் கொண்டிருக்கிறது. எம்ரிவி செனல் (பிரைவேட்) லிமிட்டட்டின் கட்டமைப்பின்படி இக்கம்பனியில் பத்து கம்பனிகள் பங்குகளைச் சொந்தமாகக் கொண்டுள்ளன. அவையாவன: எம்பிசி நெட்வேர்க் பிரைவேட் லிமிட்டட் (35.34%), விஷன் லிங் (பிரைவேட்) லிமிட்டட் (20.83 %), எஸ்லோன் இன்டஸ்ரியல் பிளாஸ்டிக் (14.48%), கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் (12.95%), ஜோன் ஓவர்சீஸ் (பிரைவேட் ) லிமிட்டட் (5.45%), ஸ்டரட் புரோக் INV (பிரைவேட்) லிமிட்டட் (3.80%), பிஸினஸ் இன்வெஸ்ட்மண்ட (பிரைவேட்) லிமிட்டட் (3.40%), த கெப்பிட்டல் மகாராஜா ஓகனைஷேஷன் லிமிட்டட் (2.27%), ஜோன்ஸ் லேண்ட் (பிரைவேட்) லிமிட்டட் (1.29%) மற்றும் டோசன் கெப்பிட்டல் பிரைவேட் லிமிட்டட் (0.16%). இக்கம்பனிகள் அனைத்தும் அவற்றின் உரித்தாண்மைக் கட்டமைப்புகளில் பங்குதாரர்களாக காணப்படுகின்றன.

வாக்களிக்கும் உரிமை

தரவுகள் கிடைக்கவில்லை

தனி உரிமையாளர்

ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
விடயங்கள்

பொதுத் தகவல்கள்

நிறுவிய ஆண்டு

2007

நிறுவுனரின் ஈடுபாடுகள்

ராஜேந்திரம் மகாராஜா மற்றும் ராஜேந்திரம் ராஜ மகேந்திரன் ஆகியோர் சிரச டிவி யின் ஸ்தாபகர்களும் கெப்பிட்டல் மகாராஜா நிறுவன ஸ்தாபகர்களுள் ஒருவரான சின்னத்தம்பி ராஜேந்திரத்தின் மகன்களுமாவர். ராஜேந்திரம் மகாராஜா 'வட்டி' என்ற சொந்த இலச்சினையைக் கொண்ட ஒரு தொழில்முயற்சியாளரும் ஹில்ட்டன் ஓட்டலின் பணிப்பாளர் சபையில் பணியாற்றியவருமான பத்மா மகாராஜாவை மணமுடித்தார். அவர் 2016 ஆம் ஆண்டில் காலமானார். ராஜேந்திரம் ராஜமகேந்திரன் கனிஸ் ராஜேந்திரத்தை மணமுடித்தார். அவர் இந்நிறுவனத்தின் கீழ்வரும் ஒரு கம்பனியான ரியுமஸ் சலூனின் CEO ஆவர். இவ் இரு சகோதரர்களும் இந்நிறுவனத்தைப் பொறுப்பேற்ற அதேவேளை ராஜேந்திரம் மகேந்திரராஜா காலப்போக்கில் ஓய்வு பெற்றார். 2018 இல் ராஜேந்திரம் ராஜமகேந்திரனின் மகன் சசீந்திரன் ராஜமகேந்திரன் இந்நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இதனிடையேரூபவ் ராஜமகேந்திரனின் மகள் அஞ்சலி ராஜமகேந்திரன் இந்நிறுவனத்தின் ஒரு குழுமப் பணிப்பாளராக இருக்கிறார். ராஜேந்திரம்; மகாராஜா மற்றும் பத்மா மகேந்திரன் தம்பதிகளின் மகனாகிய பிரதீப் மகாராஜாவும் இந்நிறுவனத்தில் ஒரு குழுமப் பணிப்பாளராக இருக்கிறார். 2015 இல் பிரதீப் மகாராஜா இலங்கை மேர்சண்ட் வங்கியின் (MBSL) பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்பட்டார்.

பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்

சுசாரா டினால் - எம் ரி வி சனல் (பிரைவெட்) லிமிடெட்டின் பிரதான நிறைவேற்று அதிகாரி. முன்னர் சிரச தொலைக்காட்சியின் தலைவராக செயற்பட்டுள்ளார். இவர் கம்பஹா மாவட்டத்தில் மேல் மாகாணசபை தேர்தலில் 2014 ல் போட்டியிட்டார்.

பிரதான பதிப்பாசிரியரின் ஈடுபாடுகள்

சுரங்க சேனநாயக்க நியூஸ் பெர்ஸ்ட் நிறுவனத்தின் அலைவரிசைத் தலைவராகவுள்ளார்.

ஏனைய முக்கிய நபர்களின் ஈடுபாடுகள்

செவன் டானியல் - நியூஸ் 1st அலை வரிசையை மேற்பார்வை செய்யும் குழுப் பணிப்பாளராகவுள்ளார். இதற்கு முன்னர் இவர் ஐக்கிய அமெரிக்காவில் என் பி சி செய்தி நிறுவனத்தின் ஆலோசகராக பணியாற்றியுள்ளார். 2009 ம் ஆண்டு எம் ரீ வி மற்றும் எம் பி சி நிறுவனங்கள் தாக்கப்பட்டதன் பின் சி என் என் தொலைக்காட்சி இவரை பேட்டி கண்டது. அதன் பின்னர், அத் தாக்குதல் தொடர்பாக சி என் என் தொலைக்காட்சியில் பேசியதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச இவரைக் கைதுசெய்ய கோரியதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்பு

News 1st, MTV Channel (Pvt) Ltd, MBC Networks (Pvt) Limited

45/3, Braybrooke Street, Colombo 2

T.P : +94 114 792 700

Fax : +94 114 792 733

Email: contact@newsfirst.lk

Website: www.newsfirst.lk

நிதிசார் தகவல்கள்

வருவாய் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

தரவுகள் கிடைக்கவில்லை

செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

தரவுகள் கிடைக்கவில்லை

விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)

தரவுகள் கிடைக்கவில்லை

சந்தையில் ஆதிக்கம்

தரவுகள் கிடைக்கவில்லை

மேலதிக தகவல்கள்

தரவுகள் மீதான தகவல்கள்

நியூஸ் 1st ன் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஒரு செய்தித்தளமாக செயற்படும் அதேவேளை இணையத்தள ஊடகம் சார்ந்த செயல்பட்டு அமைப்பு முறை சார்ந்த தகவல்களை வெளியிடவில்லை. நியூஸ் 1st பிரிவினரை தொடர்புகொண்டதன் பின்னர், MOM ஆராச்சிக் குழுவினரால் நியூஸ் 1st தொடர்பான தகவல்கள் பதியப்பட்டன. உரிமையாண்மை தொடர்பான தகவல்கள் நிறுவனப் பதிவாளர் திணைக்களத்திலிருந்து பெறப்பட்டன.

ஊடக நிறுவனத் தகவல்களின் மூலங்கள்

  • Project by
    Verité Research
  •  
    Global Media Registry
  • Funded by
    BMZ