This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-gmr.org/en/ retrieved on 2024/04/20 at 06:28
Global Media Registry (GMR) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Global Media Registry

திவயின

உபாலி நியூஸ்பெபேர்ஸ் பிரைவேட் லிமிடெட்டினால் வெளியிடப்படுகின்ற சிங்கள தினசரி, வாரப் பத்திரிகைகள். டெய்லி ஐலண்ட், சண்டே ஐலண்ட், விதுஷார, நவலிய என்பன இதன் சகோதர பத்திரிகைகள். உள்ளூர் அரசியல், வெளிநாட்டு செய்திகள், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு என்ற பிரிவுகளின் கீழ் இது சேத்தி வெளியிடுகின்றது. வார திவயினவின் வாசகர் எண்ணிக்கை வீதம் 6.88 ஆகவுள்ள நிலையில், திவயின தினசரியின் வாசகர் எண்ணிக்கை வீதம் 1.25 ஆகவுள்ளது. உபாலி நியூஸ்பெபேர்ஸ் பிரைவேட் லிமிடெட், உபாலி விஜேவர்தனவினால் ஸ்தாபிக்கப்பட்டது. இப்போது நிமால் வெல்கமவினால் நிர்வகிக்கப்படுகின்றது.

பிரதான விடயங்கள்

நுகர்வோர் வீதம்

8.13%

உரிமையாண்மையின் வகை

தனியாருடையது

பிராந்திய உள்ளடக்கம்

தேசியம்

உள்ளடக்கத்தின் வகை

கட்டணம்

ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்

உபாலி நியூஸ்பேப்பேர்ஸ் (பிரைவெட்) லிமிட்டட்

உரிமையாண்மை

உரிமையாண்மைக் கட்டமைப்பு

தகவல் பொதுவில் கிடைக்கக்கூடியதாகவுள்ளது

வாக்களிக்கும் உரிமை

தரவுகள் கிடைக்க வில்லை

குழுமம் / தனி உரிமையாளர்

தரவுகள் கிடைக்க வில்லை

உபாலி இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் ஆனது, உபாலி நிறுவனக் குழுமத்தின் ஒரு பகுதியாகும். இது, லக்மணி மற்றும் நிமல் வெல்கம ஆகியோருக்கு சொந்தமானது.

?
ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
விடயங்கள்

பொதுத் தகவல்கள்

நிறுவிய ஆண்டு

ஞாயிறு திவயின 1981லும் திவயின தினப்பதிப்பு 1982லும் ஆரம்பிக்கப்பட்டன

நிறுவுனரின் ஈடுபாடுகள்

உபாலி விஜேவர்தன 1978 இல் உபாலி நியூஸ்பேப்பர்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட்டைத் தாபித்தார். 1981 இல் இக்கம்பனி திவயின மற்றும் ஐலண்ட் பத்திரிகைகளின் ஞாயிறு பதிப்பை ஆரம்பித்தது. உபாலியின் குடும்பத்திற்கு நாட்டின் ஊடகத் துறையுடன் மிக நெருக்கமாக தொடர்புபட்ட ஒரு நீண்ட வரலாறு உண்டு. உதாரணமாக உபாலியின் ஒன்றுவிட்ட சகோதரர் ரஞ்சித் விஜேவர்தன விஜே நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட்டை தாபித்ததோடு அதன் தற்போதைய தலைவராகவும் பணியாற்றுகிறார். 1983 இல் அவரது தனிப்பட்ட ஜெட் விமானம் மலேசியாவிலிருந்து சொந்த நாட்டை நோக்கி வந்த பயணத்தில் புறப்பட்ட சிறிது நேரத்தில் காணாமற் போனபோது அவர் இறந்துவிட்டதாக சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்

நிமால் வெல்கம உபாலி நியூஸ்பேப்பர்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட்டின் தற்போதைய முகாமைத்துவப்
பணிப்பாளராவார். நிமால் உபாலி விஜேவர்தனவின் விதவையான லக்மனி வெல்கமவை (கன்னிப் பெயர் ரத்வத்த) மணம் முடித்தார். அவர் உபாலி பத்திகைக் குழுமத்தின் தலைவராகப் பணியாற்றிய காலஞ் சென்ற கலாநிதி சீவலி ரத்வத்தயின் மகளாவார். நிமால் வெல்கமவின் சகோதரர் குமார் வெல்கம ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐதேக) ஒரு
பாராளுமன்ற உறுப்பினராவார்.

பிரதான பதிப்பாசிரியரின் ஈடுபாடுகள்

வசந்த லியனகே – முன்னாள் திவயின தினப் பத்திரிகையின் பிரதான செய்தியாசிரியரான ஜயந்த சந்திரசிறி ராஜினாமாச் செய்ததன்பின் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். வசந்த லியனகேயின் சகோதரர் லால் லியனகே தற்போது திவயின பத்திரிகையின் வினியோக முகாமையாளராக செயற்படுகின்றார். வசந்த லியனகே, இலங்கை பத்திரிகை சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவின் அங்கமாகவும் செயற்படுகின்றார்.

ஏனைய முக்கிய நபர்களின் ஈடுபாடுகள்

மனோஜ் அபேதீர - பிரதி செய்தியாசிரியர் - வாராந்த ஞாயிறு திவயின

தொடர்பு

Divaina Newspapers

No. 223, Bloemendhal Road, Colombo 13

Email: divaina@unl.upali.lk

Tel: +94 11 249 9750, +94 11 234 5243

Website: divaina.com/daily/

நிதிசார் தகவல்கள்

வருவாய் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

தரவுகள் கிடைக்கவில்லை

செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

தரவுகள் கிடைக்கவில்லை

விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)

தரவுகள் கிடைக்கவில்லை

சந்தையில் ஆதிக்கம்

தரவுகள் கிடைக்கவில்லை

மேலதிக தகவல்கள்

தரவுகள் மீதான தகவல்கள்

| | http://www.ft.lk/article/115369/Divaina-senior-journalist-Shyam-Nuwan-Ganewatta-presents | Divaina senior journalist Shyam Nuwan Ganewatta presents by the Daily FT (2012), Accessed on 20 September 2018 # | | http://www.dailymirror.lk/149787/CID-arrests-Divaina-journalist-Saman-Gamage | CID arrests Divaina journalist Saman Gamage, Daily Mirror (2018), Accessed on 20 September 2018

ஊடக நிறுவனத் தகவல்களின் மூலங்கள்

திவயின செய்திப் பத்திரிகையின் உத்தியோகபூர்வ வலைத்தளம் அதன் தாபகர், பணிப்பாளர் சபை அல்லது நிறுவனக் கட்டமைப்பு பற்றி எவ்விதத் தகவலும் வழங்குவதில்லை. மேலும், உபாலி நியூஸ்பேப்பர்ஸ் (பிறைவேட்)
லிமிட்டெட்டிற்கு ஓர் உத்தியோகபூர்வ வலைத்தளம் இல்லை. ஆகையால் பகிரங்கமாகக் கிடைக்கும் இரண்டாம் நிலை மூலங்கள் உசாவப்பட்டன. பங்குதாரர்கள் தொடர்பான தகவல்கள் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் இருக்கும் வருடாந்த ரிட்டன்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டன. உரித்தாண்மை மற்றும் பணிப்பாளர் சபை தொடர்பாக கிடைக்கக்கூடியதாக உள்ள மிக அண்மைய தரவுகள் 2017 ஆம் ஆண்டுக்குரியவை ஆகும். 2017 ஆம் ஆண்டுக்கான வாசகர் தொகை பற்றிய தரவுகள் இலங்கை சந்தை ஆராய்ச்சி பணியகத்திடமிருந்து(LMRB) பெற்றுக்கொள்ளப்பட்டன. அது திவயின பத்திரிகையில் வாராந்த மற்றும் நாளாந்த வெளியீடுகளின் தொகையாகும். ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக் குழு இக் கம்பனியின் தகவல்களை முறையாகக் கோரி 2018 ஜுலை 20 ஆம் திகதி உபாலி நியூஸ்பேப்பர்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட்டை அணுகியபோது அக் கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை.

ஆவணம்

  • Project by
    Verité Research
  •  
    Global Media Registry
  • Funded by
    BMZ