This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-gmr.org/en/ retrieved on 2024/04/19 at 16:24
Global Media Registry (GMR) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Global Media Registry

அத

அத ஒரு சிங்கள மொழி தினசரி பத்திரிகை. இது, பல்வேறு வகையான விடயங்களை உள்ளடக்கி செய்தி வெளியிடுகின்றது. குறிப்பாக, உள்ளூர், சர்வதேச, சமய, விளையாட்டு, தொழிநுட்பம், வணிகம் போன்றன. இது, விஜய், டெய்லி மிரர், சண்டே டைம்ஸ், டெய்லி பைனான்சியல் டைம்ஸ் போன்றவற்றின் சகோதர பத்திரிகை.

பிரதான விடயங்கள்

நுகர்வோர் வீதம்

0.68%

உரிமையாண்மையின் வகை

தனியாருடையது

பிராந்திய உள்ளடக்கம்

தேசியம்

உள்ளடக்கத்தின் வகை

கட்டணம்

ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்

விஜய நியூஸ்பேப்பேர்ஸ் லிமிட்டட்

உரிமையாண்மை

உரிமையாண்மைக் கட்டமைப்பு

கோரிக்கையின் அடிப்படையில் தகவல் வெளிப்படுத்தல்

வாக்களிக்கும் உரிமை

இந் நிறுவனத்தின் வாக்களிக்கும் உரிமையானது பங்காளர்கள் வைத்திருக்கும் பங்குகளின் அளவை அடிப்படையாகக் கொண்டது. அதன்படி, ரஞ்சித் விஜேவர்த்தன – 89.99 வீதம், சுஜான் விஜேவர்த்தன - 10 வீதம், ருவான் விஜேவர்தன – 0.0002 வீதம், இருசி நீலா புலத்சிங்கள – 0.0002 வீதம், ரஞ்சினி நீலா விஜேவர்த்தன – 0.00023 வீதம், சாரதி லிமிடட் - 0.0002 வீதம், ஆனந்தி பாலசிங்கம் - 0.0002 வீதம்

குழுமம் / தனி உரிமையாளர்

ரஞ்சித் விஜேயவர்தன என்றும் குறிப்பிடப்படும் ரஞ்சித் சுஜீவ ஜேயவர்தனதான் விஜேய பத்திரிகை லிமிட்டெட்டின் தலைவராவார் என்பதோடு அக்கம்பனியில் 89.99 வீத பங்குகளுக்குச் சொநதக்காரராவார். அவர் இலங்கைப் பத்திரிகைச் சங்கத்தின் தற்போதைய தலைவராவார். WNL இல் பங்குகளைக் கொண்டிருப்பதற்கு மேலதிமாக ரஞ்சித் அரசுக்குச் சொந்தமான எஸ்சோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட்டில் 0.57 வீத பங்குகளையும் கொண்டிருக்கிறார். #

சுஜான் விஜயவர்தன என்று குறிப்பிடப்படும் பராக்கிரம சுஜான் விஜயவர்தன விஜேய நியூஸ்பேப்பர் லிமிட்டெட்டில் (WNL) பிரதி தலைவராக பணியாற்றுவதோடு அக் கம்பனியின் 10 வீத பங்குகளைக் கொண்டிருக்கிறார். ருவான் விஜேவர்தன என்றும் குறிப்பிடப்படும் தினேந்திர ருவான் விஜேவர்தன இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பணியாற்றுவதோடு WNL இல் 0.002 வீத பங்குகளுக்குச் சொந்தக்காரராக உள்ளார். அவர் தனது அமைச்சுப் பதவிக்கு மேலதிகமாக WNL இன் தலைவருக்கு ஆலோசகராகவும் தனிப்பட்ட உதவியாளராகவும் பணியாற்றுகிறார்.#

இருஷி நீலா புளத்சிங்கள (கன்னிப் பெயர் விஜேவர்தன) WNL இனால் நிருவகிக்கப்படும் ஓர் ஆங்கில மொழி பத்திரிகையான டெய்லி மிரரில் ஒரு துணை பத்திரிகை ஆசிரியராகவும் சிறப்பம்சங்கள் பத்திரிகையாசிரியராகவும் செயல்படுகிறார். ரஜனி சேனாநாயக்க என்றும் எழுதப்படும் ரஜினி நீலா சேனநாயக்க ரஞ்சித்தின் மனைவி என்பதோடு, WNL இல் 0.002 வீத பங்குகளுக்குச் சொந்தக்காரராக உள்ளார். #

1979 இல் தாபிக்கப்பட்ட சாரதி லிமிட்டட் ரஞ்சித் மற்றும் ரஜினி விஜேவர்தன ஆகியோருக்குச் சொந்தமான ஓர் ஆட்சேர்ப்பு ஆலோசனை நிறுவனமாகும். தற்போது இக்கம்பனி WNL இல் 0.002 வீத பங்குகளைக் கொண்டிருக்கிறது. அனந்தி பாலசிங்கம் எஸ்சோசியேட்டட் நியூஸ்பேப்பரஸ் ஒப் சிலோன் லிமிட்டெட்டினால் வெளியிடப்படும் தினகரன் நாளிதழ் மற்றும் வாராந்த சஞ்சிகை ஆகியவற்றின் பிரதி பத்திகையாசிரியராகவும் வியாபர
பத்திரிகையாசிரியராகவும் பணியாற்றினார். 2008 இல், சாரதி லிமிட்டின் ஒரு சொத்து முகாமையாளரராக அனந்தி நியமிக்கப்பட்டதோடு WNL இன் ஒரு பங்குதாரராகவும் இருக்கிறார்.

?
ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
விடயங்கள்

பொதுத் தகவல்கள்

நிறுவிய ஆண்டு

2012

நிறுவுனரின் ஈடுபாடுகள்

ரன்ஜித் விஜேவர்தன என்றும் அழைக்கப்படும் ரன்ஜித் சுஜீவ விஜேவர்தன அஸ்சோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடெட்(லேக் ஹவுஸ் என்றும் அறியப்படும் ANCL) 1973 இல் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தினால் தேசியமயமாக்கப்பபடுவதற்கு முன்னர் 1926 இல் அதனை நிறுவியவரான இலங்கை ஊடக உரிமையாளர் டீ.ஆர். விஜேவர்தனவின் மகனாவார். ரஞ்சித் விஜய நியூஸ்பேப்பரஸ் லிமிட்டெட்டின் ஸ்தாபக தலைவராக செயற்படுவதோடு, அதன் பெரும்பான்மை பங்குகளைக் கொண்டிருப்பவராகவும் உள்ளார். இக் கம்பனி விஜய பப்ளிகேஷன்ஸ் லிமிட்டெட் என்ற பெயரில் 1979 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டதெனினும், 1986 லில் அது ஞாயிறு லங்காதீப வார பத்திரிகையையும் அதன் பின்னர் 1991 இல் லங்காதீப நாளிதழையும் வெளியிடத் தொடங்கியது. ரன்ஜித் ANCL இல் 0.57வீத பங்குகளையும் கொண்டிருக்கிறார். விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட்டில் தலைவர் பதவியை வகிப்பது மாத்திரமின்றி, ரன்ஜித் லேக்ஹவுஸ் பிறிண்டர்ஸ் மற்றும் பப்ளிஷர்ஸ் லிமிட்டெட்டில் தலைவராகவும் முகாமைத்துவப் பணிப்பாளராகவும், லேக்ஹவுஸ் புக்ஷொப் பிரைவேட் லிமிட்டெட்டில் தலைவராகவும், எல்எச் பிளாண்டேஷன் பிரைவேட் லிமிட்டெட்டில் தலைவராகவும், ரன்வெளி ஹெலிடே வில்லேஜ் லிமிட்டெட்டில் தலைவராகவும், சாரதி லிமிட்டெட்டில் தலைவராகவும், ஸ்டேம்போட் லேக் (பிறைவேட்) லிமிட்டெட்டில் தலைவராகவும், விஜய கிராபிக் லிமிட்டெட்டில் தலைவராகவும் அத்துடன் இலங்கை பத்திரிகைச் சங்கத்தில் தலைவாராகவும் இருக்கிறார். ரஞ்சித் புரூயஅடன்பேக் எண்ட் கம். (சிலோன்) லிமிட்டெட்டினதும் ஆர்.எஸ். பிறிண்டெக் (பிறைவேட) லிமிட்டெட்டினதும் தலைவராகவும் உள்ளார்.

பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்

ரஞ்சித் சுஜிவ விஜேவர்தன, லங்காதீப பத்திரிகையைப் பிரசுரிக்கும் விஜய நியூஸ்பேப்பேர்ஸ் லிமிட்டடின் தலைவராக செயற்படுகின்றார் (மேலும் படிக்க மேலே பார்க்கவும்.

பிரதான பதிப்பாசிரியரின் ஈடுபாடுகள்

காஞ்சனா தஸநாயக்க - இவர், அத பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட 2012 ம் ஆண்டிலிருந்து பிரதான செய்தியாசிரியராக செயற்பட்டு வருகின்றார். அத்துடன், இவர், விஜய நியூஸ்பேப்பேர்ஸ் நிறுவனத்தின் நலன்புரிச் சங்க உறுப்பினராகவும் உள்ளார்

ஏனைய முக்கிய நபர்களின் ஈடுபாடுகள்

டினேந்திரா ருவான் விஜேவர்த்தன – (ருவான் விஜேவர்த்தன என அறிய்படுபவர்) சுஜான் விஜேவர்த்தனவின் சகோதரர். தற்போதைய இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சர். இவர், விஜய நியூஸ்பேப்பேர்ஸ் லிமிட்டடின் தலைவரின் ஆலோசகராகவும் தனிப்பட்ட உதவியாளராகவும் செயற்படுகின்றார். இவர், விஜய நியூஸ்பேப்பேர்ஸ் லிமிட்டடின் 0.002 வீத பங்குகளின் உரிமையாளர்

தொடர்பு

Wijeya Newspapers Limited

No. 08, Hunupitiya Cross Road, Colombo 2

General: +94 11 247 9479, +94 11 231 4714

Fax: +94 11 244 8323

Email: adanewspaper@gmail.com

Website: www.ada.lk

நிதிசார் தகவல்கள்

வருவாய் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

தரவுகள் கிடைக்கவில்லை

செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

தரவுகள் கிடைக்கவில்லை

விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)

தரவுகள் கிடைக்கவில்லை

சந்தையில் ஆதிக்கம்

தரவுகள் கிடைக்கவில்லை

மேலதிக தகவல்கள்

பிரதான தலைப்புக்கள்

அத, ஒரு சிங்கள தினசரிப் பத்திரிகை. இது, உள்நாடு, வெளிநாடு, சமய, விளையாட்டு, தொழிநுட்பம் வணிகம் எனப் பல்வேறு விடயங்களை உள்ளடக்குகின்ற பத்திரிகை. இது, விஜய நியூஸ்பேப்பேர்ஸ் லிமிட்டடின் ஒரு அங்கமாகும். இப்பத்திரிகை, விஜய், டெய்லி மிரர், த சன்டே ரைம்ஸ், டெய்லி ஃபைனான் ஷல் ரைம்ஸ் ஆகியவற்றின் சகோதர பத்திரிகை.

தரவுகள் மீதான தகவல்கள்

சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ஸ்தாபக வருடம் பற்றிய விபரம் அந் நிறுவனத்தின் முகநூல் பக்கத்திலிருந்து
பெறப்பட்டது. இதனிடையே, சண்டே டைம்ஸ் பததிரிகையின் உத்தியோகபூர்வ வலைத்தளம் ஒரு செய்திப் பக்கமாக மட்டுமே செயற்படுகிறது. எனவே, இந் நிறுவனம் மற்றும் அதன் முக்கிய நபர்கள் பற்றிய தகவல்கள் இரண்டாம் நிலை மூலங்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டன. ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக் குழு இக் கம்பனியின் தகவல்களை முறையாகக் கோரி 2018 ஜுலை 20 ஆம் திகதி விஜய நியூஸ்பேப்பஸ் லிமிட்டெட்டை அணுகியபோது அக் கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட கோரிக்கைக்கு 2018 ஓகஸ்ட் 17 ஆம் திகதி பதிலளித்தது. கிடைக்கப்பபெற்ற பதிலிலிருந்து வழங்கப்பட்ட சந்தை பங்குவீதத்தை (75மூ) கணிப்பிட்டு அறிந்துகொண்டமைக்கு பயன்படுத்தப்பட்ட புள்ளிவிபரங்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இக்குழுவிற்கு இல்லாததால் குழுவினால் அவ் வீதத்தை பயன்படுத்த முடியாதிருந்தது. எனினும், நிறுவன கட்டமைப்பு தொடர்பான தகவல்கள் கம்பனியினால் வழங்கப்பட்ட பதிலில் குறிப்பிடப்பட்டதோடு, கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்டன. 2017ஆம் ஆண்டுக்கான வாசகர் தொகை பற்றிய தரவுகள் இலங்கை சந்தை ஆராய்ச்சி பணியகத்திடமிருந்து (LMRB) பெற்றுக்கொள்ளப்பட்டன. அது, சண்டே டைம்ஸ் மற்றும் டெய்லி மிரர் பத்திரிகைகளின் மொத்தத் தொகையாகும்.

ஊடக நிறுவனத் தகவல்களின் மூலங்கள்

ஆவணம்

  • Project by
    Verité Research
  •  
    Global Media Registry
  • Funded by
    BMZ