This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-rsf.org/en/ retrieved on 2021/02/28 at 08:53
Reporters Without Borders (RSF) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Reporters without borders

செல்வநாதன் குடும்பம்

செல்வநாதன் குடும்பம்

செல்வநாதன் குடும்பம் (ஹரிகரன் செல்வநாதன் மற்றும் மனேகரன் செல்வநாதன் சகோதரர்கள்) எக்ஸ்பிறஸ்

நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் (பிறைவேட்) லிமிட்டெட்டில் நேரடி பங்குதாரர் கம்பனிகளாக பதியப்பட்டுள்ள

பல கம்பனிகள் மூலம் எக்ஸ்பிறஸ் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் (பிறைவேட்) லிமிட்டெட்டில் பங்குகளைக்

கொண்டிருக்கிறார்கள். எக்ஸ்பிறஸ் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் (பிறைவேட்) லிமிட்டெட்டில் நேரடி

பங்குதாரர் கம்பனிகளாக பதியப்பட்டுள்ள ஐந்து கம்பனிகளாவன: சிலோன் பினேன்ஸ் எண்ட் செக்குயுறிட்டிஸ்

லிமிட்டெட், பல்க்றம் லிமிட்டெட், டவர் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட், நட்வெஸ்ட் நொமினீஸ்

(பிறைவேட்) லிமிட்டெட் மற்றும் வோர்ட்லி இன்வெஸ்ட்மெண்ட்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட் ஆகியனவாகும்.

ஹரிகரன் செல்வநாதன் மற்றும் மனேகரன் செல்வநாதன் ஆகியோர் கார்சன் கம்பர்பேட்ச் பிஎல்சீ நிறுவனத்திற்கு

கூட்டாகச் சொந்தககாரர்களாக இருப்பதோடு, அதனை நிருவகிக்கின்றனர். போபெஸ் ஏசியாவின் கூற்றுப்படி, ஹரிகரன் மற்றும் மனேகரன் இலங்கையில் மிகப் பெரிய நான்கு செல்வந்தர்களுள் அடங்குகின்றனர். ஹரிகரன் செல்வநாதன் புக்கிட் டாரா பிஎல்சீ, கார்சன் கம்பரபேட்ச் பிஎல்சீ, கார்சன்ஸ் மெனேஜ்மெண்ட் சேர்விசஸ் (பிறைவேட்) லிமிட்டெட் மற்றும் எக்றோ ஹார்ப்பன் லெஸ்டேறி (பிறைவேட்) லிமிட்டெட் ஆகியவற்றின் தலைவராவார். மேலும் குட்ஹோப் ஏசியா ஹோல்டிங்ஸ் லிமிட்டெட்டில் அவர் உப தலைவராகவும் பணியாற்றுகிறார். கார்சன் குழுமத்தினுள் உள்ள பல துணைக்கம்பனிகளிலும் அவர் பணிப்பாளர் பதவி வகிக்கிப்பதோடு, கிறிஷ்னா கோப்பறேஷன் (பிறைவேட்) லிமிட்டெட் மற்றும் எக்ஸ்பிறஸ் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் (பிறைவேட்) லிமிட்டெட் ஆகியவற்றிலும் அவர் பணிப்பாராகப் பணியாற்றுகிறார். ஹரிகரன் செல்வநாதன் தேசிய வர்த்தக்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும் சர்வதேச வர்த்தகச் சங்கத்தின் முன்னாள் உப தலைவருமாவார்.

மனோகரன் செல்வநாதன் கிறிஷ்னா கோப்பறேஷன் (பிறைவேட்) லிமிட்டெட், சிலோன் பினேன்ஸ் எண்ட்

செக்குயுறிட்டிஸ் லிமிட்டெட் மற்றும் செலிங்சிங் பிஎல்சீ ஆகியவற்றின் தலைவராவார். அவர் இலங்கை மலேசியா

மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் காசன் கம்பர்பேட்ச் குழுமத்தலிருக்கும் பல கம்பனிகளில் ஒரு குழு

பணிப்பாளருமாவார் என்பதோடு, அதன் நிறைவேற்று முகாமைத்துவச் சபையின் ஒரு முனைப்பான உறுப்பினருமாவார். அவர் சீபேங்க் எஸ்செட் மெனேஜ்மென்ட் லிமிட்டெட்டின் பிரதித் தலைவருமாவார். முன்னதாக மனோகரன் இலங்கை வர்த்தக சங்கம் மற்றும் இந்திய இலஙகை வர்த்தக மற்றும் கைத்தொழில் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார். மேலும், கொழும்பு வடக்கு றொட்டறி கழகத்தின் தலைவராகவும் பணியாற்றினார். தற்போது, இலங்கையில் சிலி குடியரசின் கௌரவ கொன்சலாக உள்ளார். இலங்கைக்கு அவர் ஆற்றிய சேவைகைளைப் பாராட்டி இலங்கை அரசாங்கத்தினால் மனோகரனுக்கு 2005 இல் 'தேசமான்ய'

விருது வழங்கப்பட்டது. 2011 இல், இந்திய இலங்கை உறவைப் பேணிப் பாதுகாத்தமைக்காக இந்திய ஜனாதிபதியினால் அவருக்கு ' பிரவாசி பாரதீய சம்மா விருது' வழங்கப்பட்டது. மேலும், 2013 ஆம் ஆண்டு சிலி அரசாங்கம் அவருக்கு 'ஓடர் ஒப் நைட் கொம்மாணடர்' ஜனாதிபதி விருது வழங்கி கௌரவித்தது.

ஹரிகரனும் மனோகரனும் கார்சன் கம்பர்பேட்ச் பிஎல்சீயின் எந்தெந்த கம்பனிகள் ஊடாக பங்குகளை

கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, பல்க்றம் லிமிட்டெட் அத்தகைய கம்பனிகளுள் ஒன்றாக உள்ளது.

முன்னதாக த ஜேக் ஓர்கனைசேஷன் எனறு அறியப்பட்ட பல்க்றம் லிமிட்டெட் 1988இல் ஹரிகரன் செல்வநாதன் மற்றும் மனேகரன் செல்வநாதன் ஆகியோரினால் கொள்வனவு செய்யப்பட்டது. தற்போது பல்க்றம் லிமிட்டெட் குட் ஹோப் ஹோல்டிங் லிமிட்டெட், ஸ்கான் இன்வெஸ்ட்மெண்ட் (பிறைவேட்) லிமிட்டெட், ஊட்வேர்ட் (பிறைவேட்) லிமிட்டெட் ஆகியவற்றுக்கும் ஹரிகரன் செல்வநாதனுக்கும் சொந்தமாக உள்ளது. மேலும், ஹரிகரன் செல்வநாதன், அவரது மகள் சாரதா செல்வநாதன், மகன் சதீஸ் செல்வாநாதன் மற்றும் ஹரிகரனின் சகோதரர் மனோகரன் செல்வநாதன் ஆகியோர் இக் கம்பனியின் பணிப்பாளர்களாகப் பணியாற்றுகின்றனர்.

 

நட்வெஸ்ட நொமினீ (பிறைவேட்) லிமிட்டெட் செல்வாநாதன் குடும்பத்திற்கும் சசிலேகா இராமையா நடராஜூக்கும்

சொந்தமானதாகும். மனோகரன் செல்வநாதன், ஹரிகரன் சொல்வநாதன் மற்றும் கணபதி செல்வநாதன் இக்கம்பனியில் நேரடி பங்குகள் உண்டு. சசிலேகா இராமையா நடராஜ் இரு செல்வநாதன் சகோதரர்களோடு இணைப் பங்கொன்றைக் கொண்டிருக்கிறார். அவர் இராமையா நடராஜ் ஐ திருமணம் செய்துள்ளார். 2016 , 2017 ஆம் ஆண்டிற்கான கார்சன் கம்பர்பேட்ச் பிஎல்சீயின் ஆண்டறிக்கையின்படி, சசிலேகா மற்றும் இராமையா ஆகிய இருவரும் இக்கம்பனியின் பங்குதாரர்களாவார். நட்வெஸ்ட நொமினீ (பிறைவேட்) லிமிட்டெட்டைப்போலவே வோர்ட்லி இன்வெஸ்ட்மெண்ட் (பிறைவேட்) லிமிட்டெட்டும் செல்வநாதன்மார் பெரும்பான்மை பங்குகளைக் கொண்டிருக்கும் ஒரு கம்பனியாக ஆரம்பித்தது. எனினும், சசிலேகா நடராஜ் மற்றும் அவரது மகன் விக்ரம் நடராஜ் ஆகியோர் இக் கம்பனியின் அனைத்துப் பங்குகளையும் வைத்திருக்கிறார்கள்.

இக்கம்பனிகளுக்கு மேலதிகமாக, சிலோன் பினேன்ஸ் எண்ட் செக்கியுரிட்டிஸ் லிமிட்டெட் மற்றும் டவர்

இன்வெஸ்ட்மெண்ட் (பிறைவேட்) லிமிட்டெட் ஆகியனவும் ஹரிகரன் மற்றும் மனோகரன் ஆகியோர் பெரும்பான்மை

பங்குதாரர்களாகவிருக்கும் கார்சன் கம்பர்பேட்ச் பிஎல்சீயில் பங்குகளைக் கொண்டிருக்கின்றன.

ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
ஊடக நிறுவனம்
விடயங்கள்

வியாபாரம்

பெருந்தோட்டம், எண்ணெய், கொழுப்பு

குட் ஹோப் ஹோல்டிங்ஸ் லிமிடெட்

முதலீடும் சொத்து முகாமைத்துவமும்

சிலோன் காடியன் இன்வெஸ்ட்மென்ட் பி எல் சி

குடிபானம்

சிலோன் பெவெரேஜ் ஹோல்டிங்ஸ் பி எல் சி

வீட்டு மனை வியாபாரம்

காசன் கும்பேர்பச் பி எல் சி

உல்லாசம்

பெகசஸ் ஹோட்டேல்ஸ் ஒவ் சிலோன் பி எல் சி

முகாமைத்துவ சேவை

காசன் முகாமைத்துவ சேவைகள் பிரைவேட் லிமிடெட்

தெரியவில்லை

பால்குரும் லிமிடெட்

குடும்பமும் நண்பர்களும்

குடும்ப அங்கத்தவர்கள், நண்பர்களின் ஏனைய ஈடுபாடுகள்

ஹரிஹரன் செல்வநாதன் - தலைவர் - புக்கிட் தாரா பீஎல்சி, காசன் கும்பபச் பீஎல்சி, காசன் மேனேஜ்மென்ட் சேர்விசெஸ் பிரைவேட் லிமிடெட், அக்ரோ ஹரப்பன் லெஸ்டரி பிரைவேட் லிமிடெட் லெஸ்டரி பிரைவேட் லிமிடெட். அத்துடன், இவர், குட்ஹோப் ஏசியா ஹோல்டிங்ஸ் லிமிடெட் இன் பிரதி தலைவராக செயற்படுகின்றார். காசன் குரூப் கம்பெனியின் இணைந்த நிறுவனங்களின் பணிப்பாளராக செயற்படுகின்றார். ஸ்ரீ கிருஷ்ணா கோப்பரேஷன் பிரைவேட் லிமிடெட், எக்ஸ்பிறஸ் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் (பிறைவேட்) லிமிட்டெட் ஆகியவற்றின் பணிப்பாளர்.
ஹரிஹரன் செல்வநாதன், இலங்கை வணிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், சர்வதேச வணிகர் சங்கத்தின் முன்னாள் உப தலைவர்.

மேலதிக தகவல்கள்

தரவுகள் மீதான தகவல்கள்

வீரகேசரி பத்திரிகை மற்றும் எக்ஸ்பிறஸ் நியூஸ்பேபர்ஸ் ஒப் சிலோன் (பிறைவேட்) லிமிட்டட் ஆகியவற்றின்
உத்தியோகபூர்வ வலைத்தளம் அப்பத்திரிகையின் ஸதாபகர், பணிப்பாளர் சபை அல்லது அதன் நிறுவன கட்டமைப்பு ஆகியனபற்றிய எவ்வித விபரங்களையும் தருவதில்லை. எனவே, இரணடாம் நிலை மூலங்களும் கம்பனியினால் வழங்கப்பட்ட பதில்களும் இவ்வாராய்ச்சி நடைமுறையின்போது உசாத்துணைகளாகப் பயன்படுத்தப்பட்டன. பங்குதாரர்கள் தொடர்பான தகவல்கள் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் உள்ள வருடாந்த ரிட்டேர்ன்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டன. 2017 ஆம் ஆண்டிற்கான வாசகர் பற்றிய தரவுகள் இலங்கை சந்தை ஆய்வுப் பணியகத்திலிருந்து (LMRB) பெற்றுக்கொள்ளப்பட்டன. அவை வீரகேசரியின் வார மஞ்சரி மற்றும் நாளிதழ் ஆகியவற்றின் தொகையாகும். ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக் குழு இக் கம்பனியின் தகவல்களை முறையாகக் கோரி 2018 ஜுலை 20 ஆம் திகதி எக்ஸ்பிறஸ் நியூஸ்பேபர்ஸ் ஒப் சிலோன் (பிறைவேட்) லிமிட்டெட்டை அணுகியபோது அக் கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட கோரிக்கைக்கு 2018 ஓகஸ்ட் 20 ஆம் திகதி பதிலளித்தது.

  • Project by
    Verité Research
  •  
    Reporters without borders
  • Funded by
    BMZ