This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-rsf.org/en/ retrieved on 2021/04/11 at 23:36
Reporters Without Borders (RSF) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Reporters without borders

டிலித் ஜெயவீர

டிலித் ஜெயவீர

டிலித் ஜெயவீர இலங்கையின் பிரபல வர்த்தகர், இவர் ஒரு சட்ட மாணவராக இருந்தபோது, விளம்பர நிறுவனத்தை ஆரம்பித்தார். டிராட் அட்வெர்டைசிங் பிரைவேட் மிலிட்டெட். 1993 ல் ஆரம்பிக்கப்பட்ட இன் நிறுவனம் இலங்கையின் முதல் விளம்பர நிறுவனமாகும். 2005 ல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்தின்போது இன் நிறுவனத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. ஜெயவீர விளம்பரத்துடன் மட்டுமல்லாமல் வேறு வணிகத்திலும் ஈடுபட்டார். இவரின் எமக்கெவைஸ் நிறுவனம், ரீஃப்ப்கொம்பேர் நிறுவனத்தின் குறிப்பிட்ட அளவு பங்குகளை வாங்கிய பின்னர் 2010 ஆகஸ்ட் இல் இவர் அதன் பணிப்பாளரானார். ரீஃப்ப்கொம்பேர், சிட்ரஸ் லெஸ்ஸர் பி எல் சி என பெயர் மாற்றப்பட்டது. 2011 இல், ஜெயவீரவும் இன்னொரு வர்த்தகரான நிமல் பெரேராவும், ஜோர்ஜ் ஸ்டுயர்ட் அன்ட் கம்பனி லிமிடெட்டின் 43 வீத பங்குகளை கொள்வனவு செய்தபின்னர், அதன் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களாயினர். ஜெயவீர தற்போது ஜோர்ஜ் ஸ்டுயர்ட் குழுமத்தின் தலைவர். இக் குழுமம் ஜோர்ஜ் ஸ்டுயர்ட் பைனான்ஸ் லிமிடேட்டையும் உள்ளடக்குகின்றது.

2015 ல், லங்கா ஹொஸ்பிடல்ஸ் இன் பங்கு பரிமாற்றம் தொடர்பான முறையற்ற நடைமுறை மீதான குற்றச்சாட்டில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் டிலித் ஜெயவீர, வருணி அமுனுகம, சர்வஜன ஆனந்தராஜ் அமரசேகர ஆகியோரின் பணபரிமாற்றத்தை விசாரணை செய்ய உத்தரவிட்டது.

இவரது குற்றச்சாட்டு மேலெழுந்தபின்னர், தற்போதைய பிரதமரின் சகோதரரும், டெல்ஷன் நெட்வெர்க் பிரைவேட் லிமிடெட்டின் தலைவருமான ஷான் விக்ரமசிங்கவிற்கு எதிராக வழக்கு தொடுப்பதாக மிரட்டினதாக கூறப்படுகின்றது. இதற்கு, விக்ரமசிங்கவிற்கு சொந்தமான டெல்ஷன் நெட்வெர்க் பிரைவேட் லிமிடெட் தொலைக்காட்சி ஜெயவீரவிற்கு எதிரான விடயங்களை ஓளிபரப்பியதே காரணம்.

 

விக்ரமசிங்க மன்னிப்பு கேட்டதன் பின்னர் அவ் வழக்கு கைவிடப்பட்டது. விக்ரமசிங்கவின் புதல்வி இஷினி டிராட் அட்வெர்டைசிங் பிரைவேட் மிலிடெட்டின் செயல்பாடுகளுடன் முன்னர் நெருங்கிய தொடர்பிலிருந்தார். அதே வருடம், ஜெயவீரவின் சட்டத்தரணி, கப்பிடல் மகாராஜா நிறுவனத்தின் தலைவர் ஆர். ராஜமகேந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக மிரட்டினார். ராஜமகேந்திரனின் சிரச தொலைக்காட்சி மீது, இரண்டு மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யப்படவிருந்தது. இதற்கு பதிலாக, ராஜமகேந்திரனின் சட்டத்தரணி 20 பில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி எதிர் வழக்கு போடுவதாக மிரட்டியதாக கூறப்படுகின்றது.

ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
ஊடக நிறுவனம்
விடயங்கள்

வியாபாரம்

விளம்பரம்

ட்ரியாட் (பிரைவெட்) லிமிடெட்

http://டபிரோபேன் ஸ்ட்ரீட் (பிரைவெட்) லிமிடெட்

வரைதல், அச்சிடல்

எமேஜேவைஸ் (பிரைவெட்) லிமிடெட்

அச்சிடல்

பிரிட்டேஜ் (பிரைவெட்) லிமிடெட்

பொதுத்தொடர்பு

ஹார்ட்டோக் (பிரைவெட்) லிமிடெட்

நிகழ்ச்சி முகாமைத்துவம்

அட் பக் (பிரைவெட்) லிமிடெட்

டிஜிட்டல் விளம்பர முகவர், இணயத்தள வர்த்தகம்

ட்ரியாட் டிஜிட்டல் (பிரைவெட்) லிமிடெட்
அடையாளப்படுத்தல் சேவை

35 கே எம் (பிரைவெட்) லிமிடெட் சுற்றுலாத்துறை

குடும்பமும் நண்பர்களும்

குடும்ப அங்கத்தவர்கள், நண்பர்களின் ஏனைய ஈடுபாடுகள்

வருணி அமுனுகம பெர்னாண்டோ - டிலித் ஜெயவீராவுடன் இணைந்து பல நிறுவனங்களை ஸ்தாபித்து அவற்றின் பங்காளராகவுள்ளார்.

மேலதிக தகவல்கள்

தரவுகள் மீதான தகவல்கள்

டிலித் ஜெயவீர பற்றிய தகவல்கள் பொதுவாக கிடைக்கக்கூடிய பத்திரிகை செய்தி அறிக்கைகளில் காணமுடியும். நிறுவன பங்குதாரர்களின் விபரங்கள் கம்பெனிகள் பதிவாளர் திணைக்களத்திருந்து பெறப்பட்டன.

ஆவணம்

  • Project by
    Verité Research
  •  
    Reporters without borders
  • Funded by
    BMZ