This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-gmr.org/en/ retrieved on 2024/04/17 at 01:17
Global Media Registry (GMR) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Global Media Registry

பவர் ஹவுஸ் லிமிடெட்

தெரண மக்ரோ எண்டெர்டைன்மெண்ட் பிரைவேட் லிமிடெட் ஊடாக தெரண நிறுவனக் குழுமங்களை கொண்டிருக்கும், 2008 ல் உருவாக்கப்பட்ட பவர் ஹவுஸ் நிறுவனம் தெரண எவ் எம், தெரண தொலைக்காட்சி, அத தெரண இணையத்தளம், அத தெரண 24 மணி நேர தொலைக்காட்சி என்பவற்றை உடமையாக கொண்டிருக்கின்றது. டிலித் ஜயவீர மற்றும் வருணி அமுனுகம பெர்னாண்டோ ஆகியோர் இணைந்து பவர் ஹவுஸ் நிறுவனத்தின் 49 .41 வீத பங்குகளை வைத்துள்ளனர். அத்துடன் தனித்தனியாக 9 வீத பங்குகளை வைத்துள்ளனர் இலங்கை சந்தை ஆராய்ச்சி நிறுவனம் 2017 ல் மேற்கொண்ட தேசிய ரீதியில் ஆய்வின்படி தெரண எவ் எம், தெரண தொலைக்காட்சி என்பன அதிகூடிய பார்வையாளர்களையும் நேயர்களையும் கொண்டுள்ளது.

பிரதான விடயங்கள்

தாய் நிறுவனம்

பவர் ஹவுஸ் லிமிடெட்

வியாபார வடிவம்

தனியாருடையது

சட்ட வடிவம்

வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம்

வியாபாரத்துறை

தொலைக்காட்சி, வானொலி சேவை; விளம்பரம்; புகைப்பட கலையகம்; ஊடக வெளியீட்டிற்கு முன்னைய சேவை; அச்சிடுதல்; பொது உறவுகள்; ஆண்டறிக்கை வரைதல் மற்றும் தயாரிப்பு; நிகழ்ச்சி முகாமைத்துவம்; விளம்பர முகவர் சேவை மற்றும் இணையதள வர்த்தகம்; ஒலிப்பதிவு மற்றும் சுற்றுலாத்துறை.

உரிமையாண்மை

டிலித் ஜயவீர மற்றும் வருணி அமுனுகம பெர்னாண்டோ

டிலித் ஜயவீர மற்றும் வருணி அமுனுகம பெர்னாண்டோ ஆகியோர் இணைந்து பவர் ஹவுஸ் நிறுவனத்தின் 49 .41 வீத பங்குகளை வைத்துள்ளனர். அத்துடன் தனித்தனியாக 9 வீத பங்குகளை வைத்துள்ளனர்

49.4%
ஊடக நிறுவனங்கள்
Other Media Outlets

ஏனைய தொலைக்காட்சி நிலையங்கள்

தெரண ரிவி (19.5 %)
அத தெரண 24/7 (0.3%)

ஏனைய இணைய வெளியீடுகள்

http://fmderana.lk/

விடயங்கள்

வியாபாரம்

விளம்பரம்

டிராட் பிரைவேட் லிமிடெட்

புகைப்பட கலையகம்

டப்ரோபேன் ஸ்ட்ரீட் பிரைவேட் லிமிடெட்

கிராபிக் டிசைன்

இமேஜ்லயின் பிரைவேட் லிமிடெட்

வரைகலை மற்றும் அச்சிடல்

இமேஜ்வைஸ் பிரைவேட் லிமிடெட்

அச்சிடல்

பிரின்டேஜ் பிரைவேட் லிமிடெட்

பொதுத்தொடர்பு

ஹாட்டோக் பிரைவேட் லிமிடெட்

நிகழ்ச்சி முகாமை

அட் பக் பிரைவேட் லிமிடெட்

டிஜிட்டல் விளம்பர முகவர், இணையதள வணிகம்

டிராட் டிஜிட்டல் பிரைவேட் லிமிடெட்

குறியீடு பெயரிடல்

ஹம்மர் பி ரி எல் லிமிடெட்

ஒலி பதிவு தயாரிப்பு

35 கே எம் பிரைவேட் லிமிடெட்

உல்லாசம்

சிட்ரஸ் லெஷர் பி எல் சி

பொதுத் தகவல்கள்

நிறுவிய ஆண்டு

2003

நிறுவுனரின் ஈடுபாடுகள்

பிரபல தொழில்முயற்சியாளர் டிலித் ஜயவர்தன மற்றும் விஞ்ஞான, தொழிலநுட்ப, ஆராய்ச்சி, திறன் விருத்தி, வாழ்க்கைத் தெரிழில் பயிற்சி மற்றும் கண்டிய மரபுரிமை அமைச்சர் சரத் அமனுகமவின் மகளான வருனி அமுனுகம பெர்ணான்டோ ஆகியோர் பவர் ஹவுஸ் லிமிட்டெட்டிறகுச் சொந்தமான தெரன மெக்ரோ எண்டர்டெயின்மென்ட் (பிரைவேட்) லிமிட்டெட்டை கூட்டாக தாபிததனர். தற்போது, தெரன மெக்ரோ எண்டர்டெயின்மென்ட் (பிரைவேட்) லிமிட்டெட் தெரன டீவீ யையும் எப்எம் தெரனவையும் பராமரிக்கின்றது. டிலித்தும் வருனியும் ஆரம்பத்தில் அவர்கள் மாணவர்களாக இருந்தபோது ட்றயட் (பிரைவேட்) லிமிட்டெட் எனும் விளம்பர நிறுவனத்தோடு தமது வர்த்தக முயற்சியைத் தொடங்கினர். 1993 இல் தாபிக்கப்பட்ட இந்நிறுவனம் நாட்டின் முதலாவது உள்நாட்டு விளம்பர நிறுவனமாக உருவாக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டுரூபவ் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வேட்பினை ஆதரிக்கும் பிரசார இயக்கத்தை நடத்தியமைக்காக பிரசித்தமடைந்தது. ட்றயட் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தைத் தாபித்து, டிலித்தும் வருனியும் 2003 இல் கூட்டிணைக்கப்பட்டு முன்னதாக பவர் ஹவுஸ் (பிறைவேட்) லிமிட்டெட் என்று அழைக்கப்பட்ட பவர் ஹவுஸ் லிமிட்டெட் மற்றும் 2008 இல் கூட்டிணைக்கப்பட்ட தெரன மெக்றோ எண்டர்டெயின்மெண்ட் (பிறைவேட்) லிமிடடெட் போன்ற ஊடகத்தோடு தொடர்புபட்ட வேறு பல வியாபார முயற்சிகளையும் தொடங்கினர். அவரது துணைக்கம்பனிகளில் ஒன்றான இமேஜ்வைஸ் இவ் ஓட்டலின் கணிசமான பங்குகளளைக் கொள்வனவு செய்தபின்னர், ஜயவீர 2010 ஓகஸ்ட் மாதம் றீப்கோம்பர் நிறுவனத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். 2010 ஒக்டோபரில், றீப்கோம்பர் சைட்ரஸ் லெசர் பிஎல்சீ ஆக மீள் பெயரிடப்பட்டதோடு, தற்போது மூன்று இடங்களில் – ஹிக்கடுவ, வஸ்கடுவ மற்றும் கொழும்பு – ஹோட்டல்களைக் கொண்டிருக்கிறது. ஜயவீர இன்று சைட்ரஸ் லெசர் பிஎல்சீ நிறுவனத்தில் ஒரு பணிப்பாளராக இருக்கிறார். 2001 இல், ஜயவீரவும் இன்னமொரு பிரபல வர்த்தகரான நிமல் பெரேராவும் ஜோர்ஜ் ஸ்டூவர்ட் எண்ட் கம்பனி லிமிட்டெட்டின் கிட்டத்தட்ட 43 வீதமான பங்குகளைக் கொள்வனவு செய்தபின்னர் அதன் பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்பட்டனர். பணிப்பாளர் சபையின் தலைவராக அல்லது ஓர் உறுப்பினராக இருக்கும் ஜயவீர தற்போது ஜோர்ஜ் ஸ்டூவர்ட் குழுமத்தின் தலைவராகவும் இருக்கிறார். இது ஒரு நிதிக் கம்பனியையும் – ஜோர்ஜ் ஸ்டூவர்ட் பினேன்ஸ் லிமிட்டெட் - உள்ளடக்குகிறது. 2015 இல்ரூபவ் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் நிறுவனத்தின் பங்குக் கொடுக்கல் வாங்கலில் நிலவியாதாகக் கூறப்படும் ஒழுங்கீனறங்கள் தொடர்பாக டிலித் ஜயவீர, நாலக்க கொடஹேவ, வருனி அமுனுகம மற்றும் ஆனந்தராஜா அமரசேக்கர ஆகியோரின் நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான ஒரு விசாரணைக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம்; அங்கீகரம் வழங்கியது. அத்தகைய கோரிக்கைகள் மேலெழுந்த பின்னர், ஜயவீர தற்போதைய பிதம மந்திரியின் சகோதரரும் டெல்சான் நெட்வேர்க் (பிறைவேட்) லிமிட்டெட்டின் தலைவருமான சான் விக்கிரமசிங்கவிற்கு எதிராக வழக்குத்தொடரப்போவதாக எச்சரிக்கை விடுத்தார். விக்கிரமசிங்கவின் தொலைக்காட்சி அலைவரிசையாகிய டீஎன்எல் ஜயவீரவுக்கு எதிரான கருத்துக்களை ஒளிபரப்புச் செய்தது என்ற குற்றச்சாட்டின் காரணமாகவே இச் எச்சரிக்கையை விடுத்தார். விக்கிரமசிங்க மன்னிப்புக் கேட்டதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து இவ் வழக்குத் தொடுத்தல் கைவிடப்பட்டது. விக்கிரமசிங்கவின் மகள் இஷானியும் ஜயவீரவின் ட்ரயட் (பிரைவேட்) லிமிட்டட்டின் செயற்பாடுகளின் முன்னர் மிகநெருக்கமாகத் தொடர்புபட்டிருந்தார். இதே ஆண்டில் ஜயவீரவின் சட்டத்தரணிகள் கெப்பிட்டல் மகாராஜா நிறுவன லிமிட்டட்டின் தலைவரான ஆர்.ராஜமகேந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக எச்சரிக்கைவிடுத்தனர். ராஜமகேந்திரனின் தொலைக்காட்சி நிறுவனமான சிரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதாக கூறப்படும் அவதூறு கூற்றுக்களுக்கு எதிராக ரூபா 2 மில்லியன் (அ.டொலர் சுமார் 12 ,500) கோரி வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது. எனினும் ராஜமகேந்திரனின் வழக்கறிஞர்களும் ஜயவீர அவ்வழக்கைத் தொடரப் போவதானால் ரூபா 20 பில்லியன் (அ.டொலர் சுமார் 125 மில்லியன்) நட்டஈடு கோரி எதிர்வழக்கு தாக்கல் செய்யப் போவதாக எச்சரிக்கைவிடுத்தனர்.

தொழிலாளர்கள்

தரவுகள் கிடைக்கவில்லை

தொடர்பு

No. 320, 'Deutche House', T.B. Jaya Mawatha, Level 4, Colombo 10

Tel: +945300800, +945300700

Fax: +942506226

Website:www.derana.lk

வரி / அடையாள இலக்கம்

PB1399

நிதிசார் தகவல்கள்

வருவாய் (நிதிசார் தகவல்/ கட்டாயமற்றது)

தரவுகள் கிடைக்கவில்லை

செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

தரவுகள் கிடைக்கவில்லை

விளம்பரம் (மொத்த நிதியினது வீதத்தில்)

தரவுகள் கிடைக்கவில்லை

முகாமைத்துவம்

நிறைவேற்றுக் குழுவும் அக்குழுவின் ஆர்வங்கள்

டிலித் ஜெயவீர - பவர் ஹவுஸ் லிமிடெட்டின் இணை ஸ்தாபகர், பங்குதாரர்

மேலதிக தகவல்கள்

பிரதான தலைப்புக்கள்

தரவுகள் மீதான தகவல்கள்

பவர் ஹவுஸ் நிறுவனத்திற்கு தனியான இணையத்தளம் காணப்படவில்லை. தெரண நிறுவன குழுமங்களின் ஏனைய நிறுவனங்களின் உத்தியோகபூர்வ இணையதளங்கள் போதிய தகவல்களை வழங்கவில்லை. இதனால் இரண்டாம்தர தகவல் மூலங்கள் ஊடாக தரவுகள் ஆராச்சிக்கு பயன்படுத்தப்பட்டன. இருந்தபோதிலும், தகவல் மூலங்களிலும் பவர் ஹவுஸ் பற்றிய தகவல்கள் அரிதாகவே காணப்படுகின்றன. இதேவேளை, இணை ஸ்தாபகற்களான டிலித் ஜயவீர மற்றும் வருணி அமுனுகம பெர்னாண்டோ ஆகியோர் பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன. பங்குதாரர் பற்றிய தகவல்கள் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் இருக்கும் வருடாந்த வருமான அறிக்கையிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டன. ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக் குழு அக்கம்பனியின் தகவல்களை முறையாகக் கோரி 2018 யூலை 20 ஆந் திகதி பவர் ஹவுஸ் நிறுவனத்தினை அணுகியபோது அக்கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட வேண்டுகோளுக்கு பதிலளிக்கவில்லை. கிடைக்கும் மிக அண்மைய தகவல் 2015 ஆம் ஆண்டுக்குரியதாகும்.

ஆவணம்

  • Project by
    Verité Research
  •  
    Global Media Registry
  • Funded by
    BMZ