This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-gmr.org/en/ retrieved on 2024/03/28 at 10:45
Global Media Registry (GMR) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Global Media Registry

எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பேர்ஸ் சிலோன் (பிரைவெட்) லிமிட்டட்

எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பேர்ஸ் சிலோன் (பிரைவெட்) லிமிட்டட்

எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பேர்ஸ் சிலோன் (பிரைவெட்) லிமிட்டட் நிறுவனம் 1970 ம் ஆண்டு தனியார் நிறுவனமாக பதிவுசெய்யப்பட்டது. இது பிரபலமான தமிழ் பத்திரிக்கையாகிய வீரகேசரி பத்திரிகையை பிரசுரிக்கின்றது.

இந்நிறுவனம் தற்போது பல தமிழ் மொழிமூல வெளியீடுகளையும் இணையதளங்களையும் இரண்டு ஆங்கில மொழிமூல வெளியீடுகளையும் பிரசுரிக்கின்றன. டெய்லி எக்ஸ்பிரஸ், வீக்லி எக்ஸ்பிரஸ் மற்றும் தமிழ் மொழிமூல தமிழ் டைம்ஸ் என்பன வெளிநாடுகளில் பிரசுரிக்கப்படுகின்றன. இந்நிறுவனம், தினக்குரல் மற்றும் உதயசூரியன் ஆகிய பத்திரிகைகளை பிரசுரிக்கும் ஏசியன் மீடியா பப்ளிகேஷன் (பிரைவெட்) லிமிட்டட் நிறுவனத்தின் 59 . 99 வீத பங்குகளை வைத்துள்ளது.

பிரதான விடயங்கள்

வியாபார வடிவம்

தனியாருடையது

சட்ட வடிவம்

தனியார் வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனம்

வியாபாரத்துறை

அச்சிடுதல், வெளியிடுதல்

உரிமையாண்மை
ஊடக நிறுவனங்கள்
Other Media Outlets

ஏனைய அச்சு நிறுவனங்கள்

மெட்ரோ (தினசரி) (0.42%)

ஏனைய இணைய வெளியீடுகள்

http://www.virakesari.lk/

விடயங்கள்

ஊடக வியாபாரம்

வெளியீடு

ஏசியன் மீடியா பப்ளிகேஷன்ஸ் (59.99%)

பொதுத் தகவல்கள்

நிறுவிய ஆண்டு

1930

நிறுவுனரின் ஈடுபாடுகள்

பி.பி.ஆர் சுப்பிரமணியம் செட்டியார் இந்தியாவின் தமிழ் நாடு ஆவனிப்பட்டி கிராமத்திலிருந்து வந்த ஒரு
தொழில்முயற்சியாளரும் பத்திகையாளருமாவார். இந்தியாவிலிருந்து பிரித்தானிய கொலனியான இலங்கைக்கு வந்து இந்தியத் தொழிலாளர்களின் நிலைமையை கண்ட அவர் அவர்களுக்கு நீதியையும் சமத்துவத்தையும் மேம்படுத்துவதற்காக ஒரு செய்திப் பத்திரகையை தாபிக்கத் தீர்மானித்தார். எனவே, 1930 இல் சுப்பிரமணியம் வீரகேசரியைத் தாபித்து அதன் பிரதம பத்திரிகையாசிரியராகப் பணியாற்றினார். மேலும், சுப்பிரமணியம் மலேசியாவில் இறப்பர் தோட்டங்களைத் தாபித்ததோடு, சிங்கப்பூரில் காணி சொத்துகளில் முதலீடு செய்தார்.

தொழிலாளர்கள்

தரவுகள் கிடைக்கவில்லை

தொடர்பு

Express Newspapers (Ceylon) (Pvt) Limited

No. 185, Grandpass Road, Colombo 14

Tel: +94117322700, +94117322777

Website: www.virakesari.lk

வரி / அடையாள இலக்கம்

PV3125

நிதிசார் தகவல்கள்

வருவாய் (நிதிசார் தகவல்/ கட்டாயமற்றது)

5.44 Mio. $ / 830 Mio. LKR

செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

தரவுகள் கிடைக்கவில்லை

விளம்பரம் (மொத்த நிதியினது வீதத்தில்)

தரவுகள் கிடைக்கவில்லை

முகாமைத்துவம்

நிறைவேற்றுக் குழுவும் அக்குழுவின் ஆர்வங்கள்

குமார் நடேசன் என்றும் அறியப்படும் சிவகுமார் நடேசன் - இலங்கை பத்திரிகை நிறுவகத்தின் தற்போதைய தலைவராகும். எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் (பிறைவேட்) லிமிட்டெட்டின் முகாமைத்துவ பணிப்பாளர். பணிப்பாளர் - ஏசியன் மீடியா பப்பிளிகேஷன் (பிறைவேட்) லிமிட்டெட்.

மேலதிக தகவல்கள்

தரவுகள் மீதான தகவல்கள்

எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பேர்ஸ் சிலோன் (பிரைவெட்) லிமிட்டட்டின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் நிறுவன ஸ்தாபகர் பற்றிய மிகக் குறைவான தரவுகளே பதியப்பட்டுள்ளன. இருப்பினும், அச்சு பதிப்பு மற்றும் இணையதள வெளியீடுகள் பற்றிய விபரங்கள் நிரட்படுத்தப்பட்டுள்ளன. அதேநேரம், நிறுவன கட்டமைப்பு மற்றும் பணிப்பாளர் சபை பற்றிய தகவல்களும் காணப்படவில்லை. இதனால் இரண்டாம்தர தகவல் மூலங்கள் ஊடாக தரவுகள் ஆராச்சிக்கு பயன்படுத்தப்பட்டன. பெற்றுக் கொள்ளப்பட்டன. பங்குதாரர் மற்றும் பணிப்பாளர் சபை பற்றிய தகவல்கள் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் இருக்கும் வருடாந்த வருமான அறிக்கையிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டன. ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக் குழு அக்கம்பனியின் தகவல்களை முறையாகக் கோரி 2018 யூலை 20 ஆந் திகதி எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பேர்ஸ் சிலோன் (பிரைவெட்) லிமிட்டட்டினை அணுகியபோது அக்கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட வேண்டுகோளுக்கு பதிலளித்திருந்தது.. நிதி பெறுமதிகள் மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதத்தின்படி கணிக்கப்பட்டன. (1 அமெ. டொலர் = ரூபா 152 .45).

ஆவணம்

  • Project by
    Verité Research
  •  
    Global Media Registry
  • Funded by
    BMZ